100 வயதில் நீச்சல் சாதனை புரிந்தார் ஜப்பானிய மூதாட்டி

japanடோக்யோ: நூறு வயதில் சாதனை என்பது அபூர்வம். அதுவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து விளையாட்டுத்துறையில் சாதனை என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.அப்படியான ஒரு சாதனையைத்தான் ஜப்பானைச் சேர்ந்த மீக்கோ நகாயோக்கா செய்துள்ளார். உலகளவில் 1500 மீட்டர் தூரத்தை நூறு வயதில் முதலில் நீந்தியவர் எனும் பெருமையும் வரவேற்பையும் மீக்கோ நகாயோக்கோ பெற்றுள்ளார். 25 மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளத்தில் அவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.

அந்த தூரத்தை மீக்கோ நகாயோக்கா ஒரு மணி பதினைந்து நிமிடங்களுக்கு சற்று அதிகமான நேரத்தில், மல்லாந்து படுத்து நீந்தும் முறையில் நீந்தினார்.

இந்த நீச்சல் போட்டி, கடந்த சனிக்கிழமை(4.4.15) மட்சுயாமாவில் நடைபெற்றது. 100 முதல் 104 வயதுடையவர்களுக்கான பிரிவில் அவர் மட்டுமே போட்டியிட்டார்.

மீக்கோ நகாயோக்கோ அம்மையாருக்கு நீச்சலில் சாதனை புரிவது என்பது புதியது அல்ல. தனது வயதுக்கான பிரிவில் அவர் ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ளார். குறுந்தூர மற்றும் நெடுந்தூர நீச்சல் இரண்டிலும் அவர் 24 உலகப் பட்டங்களை தன் பெயரில் அவர் வைத்துள்ளார் என சர்வதேச நீச்சல் சம்மேளனமான் ஃபினா கூறியுள்ளது.

japan
மீக்கோ நகாயோக்கா

அவரது இந்த புதிய சாதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பினரலால் அங்கீகரிக்கப்படவுள்ளது.நீச்சல் விளையாட்டி ஆளுமையை செலுத்தி வரும் அவர், நீச்சல் பயில ஆரம்பித்தது என்னவோ 82 வயதில்தான். அதுவும் முழங்கால் வலிக்கான மருத்துவ நடவடிக்கையாகவே ஆரம்பித்தார்.

அதன் பிறகு உலகளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகளை படைத்து வருகிறார். தன்னால் 105 வயது வரை வாழ முடியுமானால், அதுவரை நீச்சலில் ஈடுபட விரும்புவதாக ஜப்பானிய செய்தி சேவையான க்யோடோவிடம் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment