அம்பாறை: எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் ஒரு பலம் பொருந்திய கட்சியாக மிளிரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகேவின் அழைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்த பிரதம ரணில் விக்ரமசிங்க அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
அதனையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டதில் கலந்து கொண்டு உரையற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரதம ரணில் விக்கிரம சிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை மேலோங்க செய்ய வேண்டும். அந்த வகையில் எதிர் வரும் பொது தேர்தலை முன்னிட்டு நாங்கள் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனாவை ஜனாதிபதி ஆக்கியதில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் படி 100 நாள் வேலை திட்டத்தில் பொருட்கள் , எரிபொருள் விலை குறைப்பு மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு என்பவற்றையும் வழங்கியுள்ளோம்.
1977 ம் ஆண்டு காலப்பகுதியில் திறந்த பொருளாதார முறை நாட்டிற்கு கொண்டு வந்த நாம் ஆறு மாத காலத்திற்குள் நிறை வேற்று முறையையும் கொண்டு வந்தோம் என்றார்.
Published by
![RanilWickramasinghe[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/ranilwickramasinghe1.jpg?w=109&h=150)
Leave a comment