காத்தான்குடி: காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பாடசாலையானது 01.03.1911 ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டு விழாக்கண்ட பாடசாலையாகும். இப்பாடசாலையில் கல்விகற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று சமுகத்தில் உயர் நிலையில் உள்ளார்கள். இவ்வாறு கல்விக் கண் திறந்த இப்பாடசாலையில் பழைய மாணவர் சங்கமொன்று இயங்கு நிலையில் இல்லாமை பெரும் குறையாகும்.
இதனை நிவர்த்திக்குமுகமாக பழைய மாணவர் சங்கத்தை அமைப்பதற்கான பொது வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாகவும் இதனடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தில் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் இணைந்துகொள்ள விரும்பினால் பாடசாலை அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூரணப்படுத்தித் தருமாறு கோருகின்றோம் என காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.எம். ஹக்கீம் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய தொ. இல: 0652248649, 0773794779
Published by


Leave a comment