ஜெரூஸலம்: பலஸ்தீன அதிகார சபைக்கு சொந்தமான பல நூறு மில்லியன் டொலர் வரிப் பணத்தை இஸ்ரேல் முழுமையாக விடுவிக்காவிட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி.) செல்லப் போவதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பலஸ்தீனம் ஐ.சி.சியில் இணைய நடவடிக்கை எடுத்ததை அடுத்தே பலஸ்தீன அதிகார சபைக்கு சேரவேண்டிய மாதாந்த வரிப்பணத்தை இஸ்ரேல் கடந்த ஜனவரியில் முடக்கியது.
இந்நிலையில் பலஸ்தீனத்தின் மின்சாரம், நீர் மற்றும் மருத்துவ சேவைகளில் இருக்கும் கடன்களை கழித்த பின்னர் எஞ்சிய வரிப்பணத்தை இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை விடுவித்தது. இஸ்ரேல் இவ்வாறு மூன்றில் இரண்டு வரிப்பணத்தை விடுவித்ததை அப்பாஸ் ஞாயிறன்று உறுதி செய்தார். ஆனால் அந்த பணத்தை இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பும் என்று அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
‘நாம் அந்த பணத்தை மீண்டும் திருப்பி அனுப்பு வோம். அவர்கள் ஒன்று முழுப்பணத்தையும் தர வேண்டும் அல்லது நாம் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி.) செல்வோம்” என்று அப்பாஸ் எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கை குறித்து இஸ்ரேல் அரச தரப்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு சேர வேண்டிய 130 மில்லியன் டொலர் வரிப்பணத்தை கடந்த டிசம்பரில் முடக்க ஆரம்பித்தது. பலஸ்தீனம் ஐ.சி.சியில் இணை யும் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்தே அதற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி பலஸ்தீனம் உத்தி யோகபூர்வமாக ஐ.சி.சியில் இணைந்து கொண்டது.
சர்வதேச அழுத்தம் காரணமாக பணப்பரிமாற்றத்தை ஆரம்பிக்க இஸ்ரேல் கடந்த வாரம் இணக்கம் தெரி வித்திருந்தது. இதனடிப்படையில் உடனடியாக சுமார் 400 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டது. என்றாலும் பலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் வழங்கிய சேவைகளுக்கான தொகைகள் கழிக்கப்பட்டே விடுவிக்கப்பட்டது.
இஸ்ரேல் முடக்கிய பலஸ்தீனத்தின் வரி வருவாய் பலஸ்தீன அதிகார சபையின் மொத்த வருவாயில் மூன்றில் இரண்டு பங்காகும். இந்த பணம் கிடைக் காததால் அவசரகால பட்ஜட் ஒன்றின் மூலம் பலஸ்தீனத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் சம்பளம் 40 வீத வெட்டுக்கு உள்ளானது.
Published by


Leave a comment