வன்னி அரசியலில் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா….’

hunais-mp[1]rishad– வன்னிகுரலான்

வன்னி: அரசியலில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று கேள்வி கேற்பது உண்மையாக இருக்கும்.வளர்த்தகடா மார்பில் குத்திக் கொண்மே இருக்கின்றது என்பதற்கு நல்லதொரு உதாரணமாக வன்னி மாவட்டத்தின் அரசியலில் காணமுடிகின்றது.வன்னி மாவட்டத்தில் தற்போது சிலரால் பேசப்படும் அரசியல் பேச்சுக்களில் எந்தளவு மக்கள் தாக்கம் காண்டுள்ளனர் என்று கள ஆய்வினை மேற்கொண்டு பார்த்தால் அது மிகவும் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கின்றது.

வன்னி மாவட்டத்தில்தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு எமது முஸ்லிம் அரசியல் தரப்புக்களை ஆய்வுக்குட்படுத்திய போது சில விடயங்களை அறியக் கூடியதாக இருக்கின்றது.

அமைச்சர் றிசாத் பதியுதீனினால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட ஹூனைஸ் பாருக் எம்.பி தற்போது வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு அரசியல் செய்கின்றார்.அவர் கடந்த 4 வருடங்களாக அமைச்சர் றிசாத் பதியுதீ்னின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.தனிப்பட்ட சில தேவைப்பாடுகளுக்காக அமைச்சர் றிசாத் பதியுதீனை ஒதுக்கிவிட்டு அரசியலில் அதீத ஆசை கொண்டமையினால் ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.இருந்த போதும் புதிய அரசாங்கத்திலும் அவருக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படாத நிலையில் வன்னி அரசியல் களத்தில் அவரும் சிலருடன் பயணித்து கொண்டிருக்கின்றார்.

அமைச்சர் றிசாத் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியொன்றில் தோன்றி இல்லாத பொல்லாதவைகளை கூறி வன்னி மாவட்ட மக்களுக்கு தான் மட்டுமே பணியாற்றக் கூடியவர“ என தன்னை புகழ்பாடிவருகின்றார்.குறிப்பாக ஹூனைஸ் பாருக் எம்பியை பொருத்த வரை அவரது செயற்பாடுகள் நேரடியாக அமைச்சர் றிசாத் பதியுதீனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் ஒன்றாகவே அமைந்துள்ளது.

பாலுாட்டி,சீராட்டி,வளர்த்த பிள்ளை தான் ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னை வளர்த்தவர்களை காலால் எட்டி உதைத்துவிட்டு தான்போக்கில் செலலம் நிலையில் அவர் காணப்படுகின்றார்.

கிராமங்களுக்கு சென்று அங்கு சேரும் சிலரை வைத்து அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக பல்வேறுபட்ட இல்லாத பொல்லாதவைகளை கூறும் அரசியல் கலாசாரத்திற்குட்பட்டு விட்ட துர்பாக்கிய சம்பவங்களும் கேள்விப்படாமல் இல்லை.தனிப்பட்ட சிலரது சுககேபாக வாழ்வுக்காக வாக்களித்த மக்களை துாக்கி எரிந்து விட்டு இனவாத அரசியலை வன்னியில் அரங்கேற்றம் செய்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

அமைச்சர் றிசாத் பதியுதீனை பொருத்த வரையில் அவரது அரசியல் காலத்தில் ஆற்றியுள்ள பணிகளை பொறாமை கண்கொண்டு பார்த்து அந்த அமைச்சரவை அடுத்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சில முதலாளிமார்கள தமது பின்னால் இழுத்துச் சென்று அவர்களுக்கும் ஆசை வார்த்தைகள் கூறி செயற்படுவது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்திய வீடமைப்பு திட்டம்,முதல் கிராமங்களின் பாதைகள் வரை அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்னி மாவட்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களுக்கு ஆற்றியுள்ள பணிகளை பட்டியிலிட்டு கிராமங்களில் பார்வைக்கு மக்கள் வைத்துக் கொண்டிருக்கின்ற போது,தமது இயலாத்தன்மையினையும்,கடந்த 4 வருடங்களாக அமைச்சரின் சேவையில் தம்மையும் காட்டிக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இன்று அமைச்சருக்கு எதிராக அவதுாறுகளை பேசுவது அர்த்தமற்றதொன்று ,அமைச்சர் றிசாத் பதியுதீ்னுக்கு எதிராக ஆட்களை திரட்டி போலியான முறைப்பாடுகளை செய்வதன் மூலம் அவரது கனவான அமைச்சரை அடுத்த தேர்தலில் தோற்கடிக்க அவர் எடுக்கும் சபதமாகும் என்பது இங்கு புலனாகின்றது.

வன்னியில் தற்போது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ள சக்திகளுடன் இந்த ஹூனைஸ் பாருக்கும் இணைந்துள்ளமை வடக்கில் வாழும் முஸ்லிம்களை அந்நியசக்திகளுக்கு காட்டி கொடுக்கும் ஒருவகையான செயற்பாடாகும்.இந்த மக்களுக்கு பணியாற்றுவதைவிடுத்து அதனை மக்களிடம் இருந்து அறித்தெடுக்கும் அநியாயத்தை இந்த ஹூனைஸ் பாருக் எம்.பி.செய்கின்றார் என்பதை மக்கள் புரியாமல் இல்லை.

பொதுமக்கள் இன ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி பிரிந்து சென்று தமது பிரதி நிதித்துவத்தை இல்லாமல் ஆக்குவதன் மூலம் அந்நிய அரசியல் தலைமைகளுக்கு அடிபணிந்த வாழ்வை வாழ வேண்டும் என்ற கொன்தராத்தினை இந்த ஹூனைஸ் பாருக் எம்.பி எடுத்துள்ளார் என்பதற்கு போதுமான ஆதரங்கள் உள்ளது,அரசியல் ரீதியில் மோதுவது என்றால் தான் வகித்த பாராமளுமன்றப் பதவியினை கொடுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு கொடுத்துவிட்டு அடுத்த தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு பணியாற்றுவார் என்றால் அது தான் ஒரு நேர்மையான அரசியல்வாதியின் நல்ல செயற்பாடாகும். ‘ஊரான் கோழியினை அறுத்து…..’ என்ற பழமொழிக்கமைய அமைச்சர் றிசாத் பதியுதீன் பெற்றுக் கொடுத்த வாக்கினால் அவருக்கு எதிராக செயற்படும் அரசியல் தன்மை தொடர்பில் அவர் புரிந்த கொள்ளாமல் இருப்பது அவரின் அரைசியல் ஞானத்தின் வெளிப்பாடாகவுள்ளதை காணமுடிகின்றது.

தேவையற்ற விமர்சனங்கள்,பொய் பிரசாரங்கள் ஒரு போதும் நல்ல பெயரை சம்பாதித்து கொடுக்காது என்பதை புரிந்து கொண்டு நேர்மையான அரசியலை செய்ய ஹூனைஸ் பாருக் எம.பி தயாராகுவாரா ?

Published by

One response to “வன்னி அரசியலில் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா….’”

  1. வளர்த்த கடா , மற்றவருக்கும் பொருந்தும்

Leave a comment