‘பிரான்ஸில் மஸ்ஜித்களின் எண்ணிக்கையை இரு மடங்காக்க வேண்டும்’

mosque paris franceபரிஸ்: பிரான்ஸில் இருக்கும் மஸ்ஜித்களின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் முஸ்லீம் மதத்தலைவர் ஒருவர் கோரியுள்ளார். பிரான்ஸின் இஸ்லாமிய சமூகத்தின் தேவைகளுக்கு பிரான்ஸில் தற்போது இருக்கும் 2,200 மஸ்ஜித்கள் போதுமானவையாக இல்லை என்று பிரென்சு முஸ்லீம் கவுன்சிலின் தலைவரும் பரிஸ் மசூதித் தலைவருமான டாலில் அபூபக்ர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அமைப்புக்களின் பிரெஞ்சு கூட்டமைப்பின் ஆண்டு விழாவில் பேசும்போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பிரான்ஸில் தற்போது 50 முதல் 60 லட்சம் முஸ்லீம்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.மேற்கு ஐரோப்பாவில் வேறு எந்த நாட்டைவிடவும் பிரான்ஸிலேயே முஸ்லீம்கள் பெருமளவு வாழ்கிறார்கள்.

mosque paris france
பரிஸ் நகரின் மத்தியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாயல்

அது மாத்திரமன்றி கடந்த ஜனவரியில் யூத கேலிச்சித்திர அலுவலகத்தின் மீதும் மற்றும் வர்த்தகத் தொகுதி துப்பாக்கிச் சூட்டின் சம்பவங்களுக்குப் பின்னரும், என்றுமில்லாதவாறு பிரான்ஸில் குர்ஆன் பிரதிகள் விற்பனையாக வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.SHM

Published by

Leave a comment