சயீட் அஜ்மல் மீண்டும் பாகிஸ்தான் அணியில்

ajmalலாஹூர்: பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மலின் பந்துவீச்சு முறையானது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தெரிவித்ததையடுத்து, அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். பங்களாதேஷ் சுற்றுப் பயணத்துக்கான பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது அஜ்மல் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவர் இடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் தனது பந்துவீச்சைத் திருத்தியதை அடுத்து, உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, சயீட் அஜ்மலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீண்டும் அணியில் சேர்த்துள்ளது.

ajmal

விரைவில் பங்களாதேஷ் செல்லவுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர், இரண்டு டெஸ்ட் போட்டி, ஒரு இருபது-20 ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளது. இந்த மூன்று தரப்பிலான ஆட்டத்திலும் சயீட் அஜ்மல் பங்கேற்கவுள்ளார். அதேபோன்று முறையற்ற பந்துவீச்சு விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட சகலதுறை வீரர் முகமது ஹபீஸ் பெயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் ஏப்ரல் 9ஆம் திகதி சென்னையில் தனது பந்துவீச்சைத் திருத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் உமர் அக்மல், நஸீர் ஜம்ஸாட் மற்றும் அகமட் செசாட் ஆகியோர் இருபது-20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Published by

Leave a comment