கல்குடா: கல்குடா அல்-கிம்மா நிறுவனத்திற்கு நேற்று (04) சனிக்கிழமை ,நீர்வழங்கல் மற்றும் நகர அபிவிருத்திஅமைச்சர் ரவூப் ஹக்கீம்,கிழக்குமாகாணமுதலமைச்சர் அல்-ஹாஜ் நஸீர் ஹாபிஸ் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான சிப்லி பாறுக்,அலிசாஹிர் மௌலானா,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் வை.எல்.எம். முபீன் உள்ளிட்டஅரசியல் பிரமுகர்கள் விஜயமென்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது,அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களுக்கு,அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவறிய குடும்பங்களுக்கு அல்கிம்மாநிறுவனம் வழங்கிவரும் இலவசகுடிநீர் விநியோகம் தொடர்பில் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும் கல்குடாபிரதேசத்தில் தற்போதுமுன்னெடுக்கப்பட்டுவரும் தற்காலிகத் தீர்வான சுத்தமான குடிநீர் குழாய் இணைப்புபற்றியும் பிரதானகுழாய் இணைப்புகள் முடிவுற்றதும் அல்கிம்மாநிறுவனம் இப்பிரதேசவறிய குடும்பங்களுக்கானகுழாய் இணைப்பையும் செய்து கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Published by



Leave a comment