“மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் சிறந்த கழகம் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகம்”: யூ.எல்.எம்.என்.முபீன் புகழாரம்.

Mubeen– ஏ.எல்.டீன்பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகம் 2015 ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதினை இட்டு நான் மிகவும் மகிழ்சிசியடைகின்றேன் என முன்னால் கிழக்கு மாகாகண சபை உறுப்பினரும் அமைச்சர றவூப் ஹக்கீம் இன் இனைப்ப செயலாளருமாக யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

விளையாட்டின் ஊடாக மட்டும் வெற்றி பெறமுடியாது. வீரர்களின் நல்ல பழக்க வழக்கம் மார்க்க பற்று நன்னடத்தை போன்ற பல்வேறு விடயங்கள் ஒரு விளையாட்டு வீரனிடம் காணப்பட வேண்டியது மிக முக்கிய பண்புகளாகும்.

காத்தான்னகுடி சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகராக நான் பல ஆண்டுகள் இருந்தவன் என்றவகையில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழக வீரர்களிடம் நல்ல பண்புகளை அதிகமாக காண்பதாகவும் யூ.எல்.எம்.என் முபீன் தெரிவித்தார்.

sunrise
காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம்: 2015 சம்பியன்

சென்ற காலங்களில் சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தில் பல சிறந்த வீரர்கள் விளையாடி உள்ளனர் அவர்களையும் நான் ஞாபகப்படுத்துவதுடன் இப்போது சன்றைஸ் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடிவரும் இளம் வீரர்களையும் நான் பாராட்டுவதாகவும் இளம் வீரர்கள் விளையாட்டின் ஊடாக முன்னேர வேண்டும் எனவும் முன்னால் கிழக்கு மாகாகண சபை உறுப்பினரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளரும் அமைச்சர றவூப் ஹக்கீம் இன் இனைப்பு செயலாளருமாக யூ.எல்.எம்.என்.முபீன்தெரிவித்தார்

Published by

Leave a comment