இந்தியாவின் பிரபல ஜவுளிக்கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கமெராவைக் கண்டு பிடித்த இந்திய பெண் அமைச்சர்!
பனாஜி: இந்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவில் சொப்பிங் செய்கையில் பிரபல ஜவுளிக் கடை ஒன்றின் உடைமாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவை கண்டுபிடித்தார். இந்திய மத்திய கல்வித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவில் விடுமுறையை கழிக்கச் சென்றார். கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள கன்டோலிம் நகருக்கு சென்ற அவர் சொப்பிங் செய்ய திட்டமிட்டார்.
இதையடுத்து அவர் அந்த நகரில் உள்ள பிரபல துணிக் கடையான ‘ஃபேப் இந்தியா’ கடைக்கு சென்றார். அந்த கடையில் ஆடை வாங்கிய அவர் அதை அணிந்து பார்க்க அங்குள்ள பெண்கள் உடைமாற்றும் அறைக்கு சென்றார். அப்போது அந்த அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசிய கமராவை அவர் கண்டுபிடித்தார். கமரா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அது குறித்து உடனே உள்ளூர் எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோவுக்கு தகவல் அளித்தார்.
இந்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
உடனே மைக்கேல் இது குறித்து பொலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் பொலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொலீசார் ஸ்மிருதி இரானியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டெல்லியில் பிரபல ஆடைக் கடையின் பெண்கள் உடைமாற்றும் அறையில் செல்போனில் வீடியோ ‘ஒன்’ செய்து வைத்திருந்ததை இளம்பெண் ஒருவர் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த அறையில் செல்போனை மறைத்து வைத்த கடையின் முகாமையாளர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.SHM
Leave a comment