காத்தான்குடி: 2014ம் ஆண்டு க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், அதிபர்கள், ஆசியர்களுக்கும் காத்தான்குடி பிரதேச கல்விப்பணி்ப்பாளர் எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மேற்படி பெறுபேரானது காத்தான்குடி பிரதேச கல்வி அலுவலகத்தின் சிறப்பான வழிகாட்டல்களுடன் பாடசாலைகளின் அதிபர்கள், கற்பித்த ஆசியர்களின் மகத்தான பணிக்கு கிடைத்த வெற்றியாகும். இதனை நாம் இலகுவில் மறந்து விட முடியாது.
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை சோ்ந்த 9 மாணவிகள் 9 A தர சித்தியும், மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தை சேர்ந்த 3 மாணவிகள் 9 A தர சித்தியும் அல்ஹிறா வித்தியாலயத்தை சேர்ந்த 2 மாணவர்கள் 9 A தர சித்தியுடன் அல் அமீன் வித்தியாலயத்தை சோ்ந்த 1 மாணவி 9 A தர சித்தியுடன் மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த பாடசாலைகள், அதிபர்கள், ஆசியா்கள், மாணவர்களுக்கு வலயம் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதுடன் மேலும் பல பாடசாலைகள் பல திறமையான பெறு பேறுகளை எடுத்துள்ளதினை காணக் கூடியதாக உள்ளது. எனவே அவ்வாறான பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் வலயம் சார்பாக நன்றிகளை தெரிவித்தக் கொள்கின்றேன்.
இது தவிர பரவலாக 08 A, B என பல பெறுபேறுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு சித்தியடைந்த அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும் எமது ஊரைச் சோ்ந்த பல மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள பல உயாதர பாடசாலைகளில் இருந்தும் 9 A சித்திகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் காத்தான்குடி பிரதேச கல்வி பணி்ப்பாளர் எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் அவர்கள்.
Published by

Leave a comment