கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உலகில் மசகு எண்ணெயின் விலை உயர்வடைந்து, குறைவடைந்து சென்ற வேளைகளில் இலங்கைக்கு பாதகம் ஏற்படாத வகையில் சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தங்களினால் இலங்கைக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட்டு கோடிக் கணக்கான டொலர்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு,
காரணமான ஹெஜன் உடன்படிக்கை சம்பந்தமாக கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலிடம் இன்று (30) சுமார் மூன்றரை மணிநேரம் விசாணை மேற்கொள்ளப்பட்டது.
Published by

Leave a comment