மட்டக்களப்பு: மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி காலையில் 7.15 மணிக்கு புறப்படும் உதய தேவி புகையிரதம் 7.30 க்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். காலை 10.30 க்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கி புறப்படும் புகையிரதம் காலை 11.30 க்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும்.
மட்டக்களப்பிலிருந்து மாலை 5.45 க்கு புறப்படும் பிரயாணிகள் புகையிரதம் மாலை 5.30 க்கு புறப்பட்டு கல்லோயா சந்தியில் திருகோணமலையிலிருந்து வரும் புகையிரதத்துடன் இணைக்கப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். அதுபோல் வழமையாக இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் பாடு மீன் நகர கடுகதி சேவை புகையிரதம் 8.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி காலை 6.10 க்கு வரும் புகையிரதம் 7.15 க்கு புறப்பட்டு 4 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். இரவு 7.15 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் புகையிரத நேரத்தில் மாற்றம் இல்லை. அது அதிகாலை 4.12 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும்.
கொழும்பிலிருந்து இரவு 9 மணிக்கு திருகோணமலை, மட்டக்களப்பு நோக்கி புறப்படும் புகையிரதம் 9.45 மணிக்கு புறப்பட்டு 7.10 மணிக்கு மட்டக்களப்பை வந்து சேரும்.
மாகோவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் புகையிரதம் மட்டக்களப்பிற்கு மதியம் 1.35 மணிக்கு வந்து சேரும். மட்டக்களப்பிலிருந்து காலை 5.10 க்கு புறப்படும் புகையிரத பஸ் கல்லோயாவில் 9.02க்கு சென்றடையும் மீண்டும் அதே புகையிரத பஸ் வண்டி கல்லோயாவிலிருந்து மதியம் 1.30க்கு புறப்பட்டு மட்டக்களப்பிற்கு மாலை 4.55க்கு வந்து சேரும் எனவும் புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலீவா மேலும் தெரிவித்தார்.
Published by
![Sri_Lankan_train,Northern_Line,Sri_Lanka[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/sri_lankan_trainnorthern_linesri_lanka11.jpg?w=150&h=100)
![9532294-colombo-sri-lanka--aug-16-arriving-by-trainin-the-scenic-old-british-rrailway-station-of-colombo-for[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/9532294-colombo-sri-lanka-aug-16-arriving-by-trainin-the-scenic-old-british-rrailway-station-of-colombo-for1.jpg?w=400&h=267)
![Sri_Lankan_train,Northern_Line,Sri_Lanka[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/sri_lankan_trainnorthern_linesri_lanka11.jpg?w=780&h=522)
Leave a comment