“எமது காணிப் பிரச்சினைகளை தீர்த்துத் தாருங்கள்”: கிழக்கு மாகாண ஆளுனரிடம் அமைப்பாளர் முபீன் வேண்டுகோள்

Mubeen– ஏ.எல். டீன் பைரூஸ்

ஏறாவூர்: கடந்த 22.03.2015 ஞாயிற்றுக் கிழமை ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட காணிப் பிரச்சினைகளை தீர்க்கும் விஷேட கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனான்டா கலந்து கொண்டு மக்கள் எதிர் நோக்கும் காணிப் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளருமான முபீன் விளக்கமளித்து ஆளனரின் கவனத்திற்கு பிரச்சினைகளை முன்வைத்தார்.

முபீன் தனது உரையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமான காணிப் பரப்பின் அளவு 2464.4 சதுர கிலோமீட்டர் ஆகும் மாவட்டத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை வீதம்30மூ ஆகும். அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள மொத்தக் காணி அளவில் மாவட்ட முஸ்லிம்கள் 739.6 சதுர கிலோமீட்டர் காணிக்கு உரித்துடையவர்கள் . ஆனால் வெறும் 30மூ காணி அளவே மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தாகவுள்ளது. இது மாபெரும் அநியாயமாகும் இதனை முதலில் தீர்த்து வைத்து முஸ்லிம்களின் காணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் காணப்படும் சன அடர்த்தியின் காரணமாக மக்கள் சொல்லணா நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். குடிநீர் மாசடைந்துள்ளது. காத்தான்குடியில் சேரும் குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் திண்டாடுகிறோம். எமது காணிப்பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு உயர் மட்ட அதிகாரிகள,; முன்னாள் அரசாங்க அதிபர்கள் எனப் பலரோடு பேசியும் இதுவரை எந்த முடிவும் கிடைக்கவில்லை.

காத்தான்குடிப் பிரதேசம் தென் கிழக்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த சனத்தொகை அடர்த்தியைக் கொண்ட பிரதேசம் இங்கு பாரியளவிலான காணித்தட்டுப்பாடு நிலவுகிறது. காத்தான்குடி இரண்டு பக்க எல்லையிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தினால் நிருவாகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.

வீடு கட்டல் குடிநீர் பெறல், மின்சாரம் பெரல் போன்ற அனுமதிகளுக்கு பல்வேறு தடைகளை ஆரையம்பதி பிரதேச செயலகம் ஏற்படுத்துகிறது. இப்பிரதேசத்திலுள்ள நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளில் முஸ்லிம்களின் குடியுரிமை மறுக்கப்படுகிறது. காத்தான்குடி பிரதேச எல்லைக்கான மூன்று அரசாங்க வர்த்தமானி அறிவித்தல்கள் தெளிவாக இருந்தும் காத்தான்குடி பிரதேச எல்லையை நிர்ணயம் செய்யாமல் மட்டக்களப்பு கச்சேரி நிருவாகம் மறுத்து வருகிறது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர் நோக்கிய காணிப்பிரச்சினை காணித்தட்டுப் பாட்டை தீர்க்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் முஸ்லிம்கள்; சம்மேளனம் எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பெயரில் 2002ம் ஆண்டில் அமைக்கப்பட்ட வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகம் இன்னும் சுதந்திரமாக செயற்பட முடியாமல் பல்வேறு தடைகளை மட்டக்ளப்பு கச்சேரி ஏற்படுத்துகிறது. இப்பிரதேச எல்லைக்குள் 270 சதுர கிலோமீட்டர் பரப்பு காணிகளிலிருந்தும் முஸ்லிம்களால் பயன்படுத்த முடியவில்லை

வாகரை பிரதேச செயலகத்தால் கோரளை மத்தி முஸ்லிம் பிரதேச செயலக காணிகள் நிருவாகம் செய்யப்படுகின்றன இறுதியாக அரசாங்கத்தால் நியமிக்;கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக் குழுவில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளோம்.

கோரளை மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு கோரளை தெற்கு கிரான் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. இதனால் ஓட்டமாவடியில் பாரிய காணிப்பற்றாக்குறை நிலவுகிறது மேற்குறித்த காணிப்பிரச்சினைகள் தொடர்பில் இறுதியாக 2012 அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக் குழு முன்பாக மேற்குறிப்பிட்ட காணிப்பிரச்சினைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கொண்டு சென்றிருந்தோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆணைக்குழு முன்பாக தோன்றி மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சனைகள் தொடர்பில் சாட்சியம் அளித்திருந்தார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவற்றை தடைப்படுத்தி வைத்திருந்ததாக அறிந்தோம். அத்துடன் மாவட்ட முஸ்லிம்கள் விவசாயக் காணி தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். தமது காணிகளுக்கான ஆவணங்கள் இல்லாமல் அல்லலுறுகின்றனர்.

மற்றும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட முஸ்லிம்கள் தமது நிருவாக மற்றும் குடியிருப்பு விடயங்களுடன் காணிப் பயன்பாட்டில் பல்வேறு தடைகளை எதிர்நோக்குகின்றனர். பிரதேச செயலாளர் முஸ்லிம்களின் காணி உரிமையை மறுத்து வருகிறார்.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் அரச உயர் மட்டங்களுக்கு செய்தும் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை . தயவு செய்து மேற்படி மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுத் தருமாறு மேதகு ஆளுனரிடம் வினயமாக கேட்டுக் கொள்கிறோம் என்று கூறி முபீன் தனது உரையை முடித்ததுடன் ஆளுனர், முதலமைச்சர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடன் எழுத்து மூல விரிவான முறைப்பாட்டையும் கையளித்தார்.

Published by

Leave a comment