இணக்கப்பாட்டு அரசியல் சரணாகதி அரசியலாக மாறுமாயின் முரண்பாட்டு அரசியலே ஒரே வழி வை.எல்.எஸ்.ஹமீட்

yls hameed– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

ஓட்டமாவடி: சமகால அரசியலில் பேசப்பட்டு வரும் விடயமான தேர்தல் முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு பாராளுமன்ற தேர்தல் விகிதாசார முறையினை மாற்றியமைத்து தொகுதிவாரியான தேர்தல் முறைமையினை அறிமுகப்படுத்தும் செயற்திட்டமானது தற்பொழுது அரசியல் உயர் மட்டங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இதற்கு சிறுபான்மை கட்சிகளை சார்ந்த அரசியல் வாதிகள் தங்களது பணிகளை முன்னெடுக்கும் அதே சமயத்தில் இதன் சாதக பாதக நிலைமைகளை நாட்டில் மூன்றாவது சிறுபான்மை சமூகமாக இருக்கின்ற முஸ்லிம் மக்களும் அவர்களை சார்ந்திருக்கின்ற புத்தி ஜீவிகள், உலமாகள் எல்லோரும் இந்த விடயத்தில் விழிபுணர்ச்சியுடன் செயற்படுவதும், அரசியல் வாதிகளை பின் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தொகுதி வாரியான முறைமை அறிமுகப்படுத்தப்பட்டால் அது முஸ்லிம் சமூகத்தை எவ்வாறு பாதிப்புக்குள்ளாக்கும் என்ற விடயத்தில் கூடுதல் கரிசனை எடுத்து முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகள் வென்றெடுக்கப்படுவதில் முன் நின்று உழைக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்ற தேர்தலில் 30வீதமாக நாட்டில் வாழுக்கின்ர சிறுபான்மை மக்களுக்கு விகிதாசார அடிப்படையில் 67 ஆசனங்களாவது கிடைக்க வேண்டும் ஆனால் தொகுதிவாரி தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டால் 30 வீதமாக உள்ள சிறுபான்மை மக்களுக்கு 40க்கும் குறைவான ஆசனங்கலே கிடைக்கும். அதிலும் முஸ்லிம் சமுகத்தையே இதன் தாக்கமானது கூடுதலாக பிரதிபலிக்கும் விடயமாக இருக்கப்போகின்றது.

தேர்தல்முறை மாற்றங்களும் சிறுபான்மை மக்களும் என்ற தொனிப்பொருளில் கடந்த திங்கட் கிழமை (23.03.2015) எங்கள் தேசம் முஸ்லிம் சஞ்ஞிகையின் ஏற்பாட்டில் முஸ்லிம் எழுத்தாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அழைத்து நாடத்திய கலந்துரையாடலில் மேற்கண்டவாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப் போவதாக கூறப்படுகின்ற பாராளுமன்ற தேர்தல் முறைகள் சம்பந்தமாக இணைய நாளிதளுக்கு கருத்து தெரிவித்த வை.எல்.எஸ். ஹமீட்..

அஹமட் இர்ஸாட் :- எதிர்கால பாராளுமன்ற தேர்தலில் தொகுதிவாரி முறையிலான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமகால அரசியலில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது இந்த தொகுதிவாரியான தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டால் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தில் அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதில் நீங்களும் உங்கள் கட்சியும் இருக்கின்றது?

yls hameed

வை.எல்.எஸ். ஹமீட்.:- கடந்த ஜனாதிபதி தேர்தலின் வாக்குறுதியாக முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் முறைமையினை மாற்றி புதிய தேர்தல் முறையினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தேசிய அரசியலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால் 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இப்பொழுது இருக்கின்ற அரசியல் யாப்பின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி தேர்தல் முறைக்கும், விகிதசார தேர்தல் முறைக்கும் முன்னதாக இருந்த தேர்தல் முறையின் பிரகாரம் இந்த நாட்டில் ஆட்சியை தீர்மானிக்கின்றவர்கள் ஒரு சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். அந்த வகையில் அன்று ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சிறீலங்கா சுதந்திர கட்சி தேர்தலில் போட்டியிட்டு தனித்து ஆட்சியமைக்கின்ற தேர்தல் முறையாகவே காணப்பட்டது.

ஜனநாயக ஆட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களை கொண்டு செய்யப்படுக்கின்ற ஆட்சி என்பதாகும். ஆனால் 78ம் ஆண்டுக்கும் முன்பிருந்த ஜனநாயக ஆட்சி என்பது ஒரு சமூகத்தால் முன்னெடுக்கப்படுக்கின்ற ஆட்சியாகவும், ஏனைய சமூகங்கள் ஆழப்படுகின்ற சமுக ஆட்சியாகவுமே காணப்பட்டது. அதனால்தான் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்படுகின்ற பொழுது ஒவ்வொரு கட்சியும் மாறிமாறி எதிர்த்து வந்தது. ஏனென்றால் முழுக்க முழுக்க பெரும்பான்மை மக்களின் உணர்ச்சிகளை தூண்டி தேர்தல் பிரச்சரங்களை செய்யும் போது சிறுபான்மை மக்களின் உரிமைகள் முடக்கப்பட்ட நிலையில் பெரும்பான்மை சமூகம் ஆட்சியமைத்து வந்ததனை அந்த ஆட்சியில் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடிய விடயமாக காணப்பட்டது.

1978ம் ஆண்டு தற்போதுள்ள புதிய யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளில் மட்டும் அரசாங்கத்தினை தீர்மானிக்கின்ற அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட்டு அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மை சமூகங்களும் ஜனநாயக நீரோட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டது. இது சிறுபான்மை சமூகத்தின் அரசியல் அபிலாசைகளுக்கும், அரசியல் உரிமைகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கின்றேன். அந்த வகையில் அறிமுகப் படுத்தப்படவுள்ள தொகுதிவாரி பாராளுமன்ற தேர்தல் முறையானது முஸ்லிம் சமூகத்தையும் சிறுபான்மை சமூகத்தையும் ஆழநினைக்கும் தேர்தல் முறையாகவும் பார்க்க முடியும்.

அஹமட் இர்ஸாட் :- காவி உடையணிந்தவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் வருவதற்கு சிறீலங்க முஸ்லிம் காங்கிரசின் தோற்றப்பாடு ஒரு காரணம் என்று கூறப்படும் நிலையில், இணக்கப்பாட்டு அரசியலை முஸ்லிம் கட்சிகள் மேற்கொண்டுவரும் இந்த நிலையில் நீங்கள் ஒரு முஸ்லிம் கட்சியின் செயலாளர் என்றடிப்படையில் தேர்தல் முறைகள் மாற்றம் சம்பந்தமாக எவ்வாறான கருத்தில் உள்ளீர்கள்?

வை.எல்.எஸ். ஹமீட்.:- இனவாதம் என்பது இன்று நேற்று உருவானது அல்ல. அன்று பண்டாரநாயக்காவை கொலை செய்வதற்கு கூட இனவாதமே முக்கிய காரணமாக இருந்தது. ஆகவே இணக்கப்பாட்டு அரசியலுக்கும் காவி உடைகள் அணிந்தவர்கள் பாராளுமன்றம் வருவதற்கு SLMC யின் தோற்றம் காரணம் எனும் விடைக்கு நான் உடண்பாடில்லை. ஆகவே அன்று உள்ள தேர்தல் முறையானது சிறுபான்னமை கட்சியினர் பாராளுமன்ற கதிரையில் உட்காருவதற்க்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால் இன்று இருக்கின்ற விகிதாசார தேர்தல் முறையானது சிறுபன்மை கட்சியினருக்கு எந்தளவு அதிகாரத்தினை வழங்கியிருக்கின்றதோ அதே அளவு இனவாத கட்சிகளுக்கும் அதிகாரத்த்தினை வழங்கி பாராளுமன்ற கதிரைகளில் உட்காரும் சந்தர்பத்தை வழங்கியுள்ளது.
சிறுபான்மை கட்சிகளின் அரசியலை எடுத்துக் கொண்டால் தமிழ் கட்சிகள் அரசாங்கங்களுடன் முரண்பாட்டு அரசியலையே மேற்கொண்டுவருகின்றனர். அதற்குறிய முக்கிய காரணம் அவர்கள் தங்களுக்கென்று ஆழுகை பிரதேசம் ஒன்றினை வைத்திருக்கின்றனர். அதனால் அவர்கள் தங்களுடைய பிரதேசத்தை ஆளும் அதிகாரம் வரும் வரைக்கும் முரண்பாட்டு அரசியலையே நம்பிக்கையுடன் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு அவ்வாறான தனியான நிலப்பிரதேசம் இல்லாத நிலையில் முஸ்லிம்கள் வடகிழக்குக்கு வெளியே நாலா புறங்களிலும் சிதறி வாழ்கின்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளினால் அரசாங்கங்களுடன் தொடர்ந் தேர்ச்சியாக முரண்பாட்டு அரசியலை மேற்கொள்ள முடியாது. ஆனால் சந்தர்ப்பம் வரும்போது முஸ்லிம்களின் உச்சகட்ட உரிமைகளின் பாதுகாப்பிற்காக முரண்பாட்டு அரசியலை மேற்கொள்ளவே வேண்டும் என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்தில்லை.

அஹமட் இர்ஸாட் :- நிறைவேற்று அதிகாரம் முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உறுவான SLMC முன்னால் ஜனாதிபதி பிரமதாசாவை மீண்டும் ஜனாதிபதியாக இருப்பதற்கு ஆதரித்தது. அதனால் இணக்கப்பாட்டு அரசியல் முஸ்லிம் கட்சிகளின் சார்பில் தோற்றம் பெறுகின்றது. ஆகவே இப்போது முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலுடன் சேர்ந்தா நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேர்தல் முறைமையினை கையாளப்போகின்றீர்கள்?

வை.எல்.எஸ். ஹமீட்.:- முதலில் நான் கூறிக்கொள்ள விரும்புவது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் நிறைவேற்று அதிகாகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கெதிராக பரிணமிக்கவில்லை. அப்போது ஜனாதிபதி ஆர். பிரேமதாசவை SLMC ஆதரித்தது என்பது உண்மை ஆனால் அதன் கொள்கையின் அடிப்படையில் அன்று ஆதரிக்கவிலை என்பது மறுபக்கத்தில் விளங்கிக்கொள்ள வேண்டிய உண்மையாகவும் உள்ளது.. அதனால்தான் தலைவர் முஸ்லிம்களுக்கு இணக்கப்பாட்டு அரசியல் சரி எனத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இணக்கப்பாட்டு அரசியலானது சரணாகதி அரசியலாக மாறும் சந்தர்ப்பம் ஏற்படுமாயின் முரண்பாட்டு அரசியலை முஸ்லிம் கட்சிகள் ஒருமித்து மேற்கொள்வதே ஒரே வழி என்ற முடிவினை நாங்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
அஹமட் இர்ஸாட் :- தொகுதிவாரி தேர்தல் முறை வருமாயின் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ளும்படியாக முஸ்லிம்களுக்காக மேலும் பல தேர்தல் தொகுதிகள் உறுவாக்கப்பட வேண்டும் என்பது உங்களுடைய கருத்துக்களில் தெளிவாகின்றது. அப்படியிருந்தால் இணக்கப்பாட்டு அரசியலை புறந்தள்ளி விட்டு முரண்பாட்டு அரசியலினால் நீங்கள் கூறுவது சாத்தியமாகுமா?

வை.எல்.எஸ். ஹமீட்.:- இணக்கப்பாட்டு அரசியல் தோல்வி அடையும் பட்சத்தில்தான் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒருமித்து முரண்பாட்டு அரசியலை செய்ய வேண்டும். இந்த தேர்தல் முறைமை பற்றி கதைக்கப்படும் இந்த நேரத்தில் இணக்கப்பாட்டு, முரண்பாட்டு அரசியல் இருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தே தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் இணக்கப்பாட்டு அரசியலில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளும், முரண்பாட்டு அரசியலில் இருக்கும் தமிழ் கட்சிகளும் ஒருமித்த குரலும் தற்போது இருக்கின்றமையானது மகிழ்ச்சி அழிக்கின்றது.

அஹமட் இர்ஸாட் :- ரவூப்ஹக்கீம் யாறென்று கேட்டால் அவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் என்பார்கள். அதே போல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ன என்று வினவினால் அது அமைச்சர் ரிசாட் பதுர்டீனின் கட்சி என்பார்கள். அந்த வகையில் பாரிய வித்தியாசம் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தில் இரு கட்சிகளுக்கும் இருக்கின்றது. எனவே தொகுதிவாரி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்வீர்களா?

வை.எல்.எஸ். ஹமீட்.:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்பதன் விளைவுதான் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தோற்றமும் அது மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் அங்கீகாரமுமாகும். முக்கிய விடயமாக நான் கூறிக்கொள்ள விரும்புவது பெரும்தலைவர் அஸ்ரபைதான் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என மக்கள் அழைத்தார்கள். ஆனால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் ரவூப்ஹக்கீம் அவர்களுக்கு அரசியல் விலாசத்தை கொடுத்தது.அந்த வகையில் ஒரு காலமும் ரவூப் ஹக்கிமை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று அழைக்கமுடியாது. அமைச்சர் ரவூப் ஹக்கீமே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்கள் அதிக வாக்குகளை பெற்ற கட்சி என்று கூறுவாறே தவிர ஒரொ போது அவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் ஏக பிரதி நிதிகள் எனக் கூறுவது கிடையாது.

அஹமட் இர்ஸாட் :- தமிழர்களையும் ஒருங்கினைத்துத்தான் அரசியலை இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துப்பட முன்னாள் அமைச்சர் பசிர் சேகுதாவூத்தின் கருத்துக்கள் அன்மைக்காலமாக அமைந்திருக்கின்றது இது சம்பந்தமாக உங்களுடைய கருத்து என்ன?

வை.எல்.எஸ். ஹமீட்.:- முஸ்லிம்களும் தழிழர்களும் இணைந்து அரசியல் செய்ய வேண்டும் என்பதில் எங்களிடம் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் தமிழர்களும் முஸ்லிம்களுக்குமிடையில் இருக்கின்ற பிரச்சனைகளை அடையாளம் காணாமல் ஒருங்கினைந்த அரசியலை செய்வதென்பது சாத்தியப்படாத விடயமாகும். முதலில் தமிழர்கள் முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுப்பும் முஸ்லிம்கள் தமிழர்களுக்கும் விட்டுக்கொடுப்புச் செய்து தங்களது உறவுகளை பலப்படுத்திய பின்பே இரு சமூகங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் ஒருங்கினைந்து அரசியலினை மேற்கொள்ள முடியும் என்பதில் நாங்கள் திடமாக உள்ளோம். முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகள் முற்று முழுதாக வெளிக்கொண்டு வரப்படுவதில்லை ஏன் என்றால் முஸ்லிம்களுக்கு தனியான ஊடகங்கள் அற்ற நிலைமை இருக்கின்றமையே ஆகும். ஆனால் தமிழர்களின் பிரச்சனைகள் அவர்களுக்கு ஊடகங்கள் அதிகளவில் இருபதனால் வெளிக்கொண்டு வரப்படுக்கின்றது.

அஹமட் இர்ஸாட் :- அகில இலங்கை மக்கள் காங்கிரசை பிரதி நித்துவப்படுத்துபவர் என்ற வகையில் உக்களுடைய கட்சி சார்பாக இந்த புதிய தேர்தல் முறைமைகள் சம்பந்தமாக முஸ்லிம் மக்களுக்கு எதை சொல்ல விரும்புக்கின்றீர்கள்?

வை.எல்.எஸ். ஹமீட்.:- இந்த தேர்தலில் எங்களுடைய பிரதி நித்தித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் அதே நேரத்தில் பார்வையாளர்களாக நாங்கள் அரசாங்கத்துக்கு வெளியில் இருக்காமல் நாங்களும் அமைக்கப்படுக்கின்ற அரசாங்கத்தினை தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு அறிமுகப்படுத்தப்படும் தொகுதிவாரி தேர்தல் முறையின் மூலம் எத்தனை ஆசனங்கள் முஸ்லிம்கள் சார்பாக வென்றெடுக்க முடியும் என்பதில் மிகவும் உன்னிப்பாக செயற்படுவதுடன். கட்சிகளை புறம் தள்ளிவிட்டு கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவினை எவ்வாறு மக்கள் தீர்மானித்தார்களோ அதே போன்று முஸ்லிம் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு பின்னால் சென்று தங்களது முடிவினை எடுப்பதை விடவும் மக்கள் சிறந்த முறையில் வரலாற்றினை பிரட்டிப்பார்த்து சிந்தித்து சிறந்த முடிவினை அரசியல் கட்சிகள் எடுபதற்க்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதோடு, அரசியல் கட்சிகளுக்காக சமூதயாம் விழித்துக் கொள்ள வேண்டும் என்பது எனதும் எனதும் கட்சியினதும் முடிவாகும்.

Published by

Leave a comment