மெல்போன்: உலகக்கிண்ண லீக் சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்திடம் நாங்கள் அடைந்த தோல்விக்கு இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்கப் போவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார். உலகக்கிண்ணத் தொடரில் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன.
இதற்கு முன்னர் ஓக்லாந்தில் நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோற்கடித்திருந்தது. இந்த தோல்விக்கு மெல்போர்ன் இறுதி ஆட்டத்தில் பதிலடி கொடுத்து உலகக்கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் அவுஸ்திரேலியா இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் பற்றி அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் கூறுகையில், இறுதிப் போட்டி நடைபெறும் மெல்போன் மைதானத்தில் நியூசிலாந்து அணி 4 முறைதான் எங்களை வீழ்த்தியுள்ளது. 15 முறை நாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம்.
நியூசிலாந்தில் உள்ளது போல் அவுஸ்திரேலிய மைதானங்களின் சூழல் இல்லை. 29ம் திகதி நடைபெறும் போட்டி எல்லா ஆட்டங்களையும் விட வித்தியாசமானதாக இருக்கும் என்றும் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.
Published by


Leave a comment