நாடு முழுவதிலும் இலவச வைபை சேவை: கோட்டை ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை ஆரம்பம்!!

WIFI-251x300[1]கொழும்பு: நாட்டில் இலவச வைபை (WiFi) வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக திங்கட்கிழமை, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi வலயம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடந்த ஊடக முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் இந்தத் தகவலை கூறினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளராக களம் இறங்கிய மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலவச WiFi வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

ஜனாதிபதியின் 100 நாள் வேலைத் திட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட நாட்கள் நிறைவுற்றுள்ள நிலையில் இதுவரை இலவச WiFi வழங்கப்படும் திட்டம் செயற்படுத்தப்படவில்லை. எனினும், இளைஞர் யுவதிகளுக்கு சற்று மகிழ்ச்சி தரும் செய்தியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

Published by

Leave a comment