லண்டன்: ஐரோப்பா முழுவதிலும் உள்ள முஸ்லிம் தலைவர்கள் இணைந்து ஒரு ஒன்லைன் பத்திரிகையை தொடங்கியுள்ளனர். இது, மதத் தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமிய அரசு போன்ற குழுக்களுக்கு எதிராக எடுக்கப்படும் முயற்சிகளின் பகுதியாக தொடங்கப்பட்டுள்ளது.
‘இமாம்ஸ் ஒன்லைன்’ எனப்படும் இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ள ‘Haqiqah’ அல்லது ‘The Truth’, என்று அழைக்கப்படும், இந்த டிஜிட்டல் இதழின் நோக்கம் மதத் தீவிரவாத இயக்கங்கள் குறித்த யதார்த்தத்தை இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்துவதேயாகும்.
இணையத்தில் தீவிரவாத பிரச்சாரத்தின் தாக்கம் குறித்து தாங்கள் கவலையடைந்திருப்பதாகவும் , இதனால் உருவாகின்ற தீய முறைகேடான மனநிலையை சரிசெய்ய இந்த புதிய ஒன்லைன் பத்திரிகைதான் ஒரேவழி என்றும் அந்த இமாம்கள் கூறுகிறார்கள்.
Published by


Leave a comment