அல்குர்ஆன் பயிற்சி மன்றமும் பாராட்டு நிகழ்வும்

thajweed madrasa– ஏ.எல். டீன் பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி தஜ்வீதுல் குர்ஆன் பயிற்சி கல்லுரியின் 2015ம் ஆண்டிக்கான முதலாவது பயிற்சி மன்றமும் பாராடடு நிகழ்வும் (2015.03.27 வெள்ளி) முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் புஹாரி மண்டபத்தில் தலைவர் றவுப் ஏ மஜீட் தலைமையில் நடைபெற்றது.

மாணவர்கள் தங்களின் ஆரம்ப வயதிலிருந்தே அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓத கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தூர நோக்குடன் சுமார் கால் நூற்றாண்டு முன் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த தஜ்வீதுல் குர்அன் பயிற்சி கல்லூரியாகும். தங்கள் கல்லூரி மாணவர்களின் திறமையை பொற்றோர் சமூகமும் ஏனையவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் மாணவர்களின் அறிவு, ஆற்றலை வெளிப்படுத்தல் ,அவர்களை ஊக்குவித்தல் என்ற அடீப்படையில் இன்று இடம் பெற்ற நிகழ்விற்கு பள்ளிவாயலின் தலைவர் றவுப் ஏ மஜீட், செயலாளர் எம்.ஜ.உசனார் ,மௌலவி அப்துல் காதர் (பலாஹி),மௌலவி எம்.பாசில் (முப்தி), அஷ்யெஹ் ஆதில் ஹஸன்(பலாஹி),எம்.முஸ்தபா (பஹ்ஜி), அல்ஹாஜ் எம். சய்யது அஹமது (ஓ.ஆசிரியர்) உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வின் போது காத்தான்குடி அல்குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் அ;ஷ்செய்ஹ் அல்ஹாபிழ் மௌலவி எம் சாஜஹான்(பலாஹி)டீயுஃதுP இன் விசேட உரரை ஒன்றும் இடம் பெற்றது.

குர்ஆன் பயிற்சி கல்லூரியின் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இறைபணி செய்த அல் ஆலிம் ஆதம்பாவா (பலாஹி) அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்,பணம் பரிசில்களையும் பெற்றுக் கொண்டார்.

thajweed madrasa

athambawa mou

thajweed

Published by

Leave a comment