
எம்.எஸ்.எம்.நூர்தீன், (ஊடகவியலாளர்)
தாறுஸ்ஸலாம் வீதி,
காத்தான்குடி.06,
22.3.2015
எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ்(புவி)
பிரதம ஆசிரியர்,
வார உரைகல் பத்திரிகை,
காத்தான்குடி
தங்களினால் வாராந்தம் காத்தான்குடியில் வெளியிட்டு வரும் வார உரைகல் எனும் பத்திரிகையின் இறுதியாக (19.3.2015) வந்த பதிவில் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் முஸ்தபா என்பவரின் பெயரில் முகநூல் ஒன்றை நான் திறந்து அதில் உங்களைப் பற்றி எழுதியதாகவும் அதை நானே திரை மறைவில் செய்து வருவதாகவும் எழுதி என் மீதான உங்கள் காழ்ப்புணர்வையும், வஞ்சகத்தையும் மீண்டுமொரு முறை தீர்த்துள்ளீர்கள்.
குறித்த உங்களின் அந்தச் செய்தியில் நேரடியாக எனது பெயரை எழுதாவிட்டாலும் என்னையே இலக்கு வைத்து அந்தச் செய்தியை நீங்கள் எழுதியிருப்பதை பார்க்க கூடியதாகவுள்ளது. அதனாலேயே நான் உங்களை இது தொடர்பில் சத்தியம் செய்தவற்காக அழைக்க வேண்டி ஏற்பட்டது.
நீங்கள் உங்கள் பத்திரிகையில் என்னைப்பற்றிய நூற்றுக்கு மேற்பட்ட செய்திகளை எழுதியுள்ளீர்கள்.
நான் மலம் கழித்தாலும் அதை கிண்டிப்பார்த்து அதை பகுப்பாய்வு செய்து எழுதும் மிகப் பெரிய ஊடகக்காரர் நீங்கள்.
என் மீதான உங்கள் பொறாமையின் ஒட்டு மொத்த வடிவத்தையும், என் மீதான உங்கள் காழ்ப்புணர்வையும் எழுத்தில் காட்டி இட்டுக்கட்டி சோடனை செய்து புனைந்து கால் தலை உடம்பு வைத்து உங்களின் கற்பனைக்கு வரும் அனைத்தையும் எழுதி வருகின்றீர்கள்.
இவ்வாறல்லொம் நீங்கள் எழுதும் போது அல்லாஹ்விடம் அவற்றை ஒப்பு வித்து விட்டு உங்களுக்கு பதில் தருவதில் எந்த ஆர்வமும் காட்டுவதற்கு நான் விரும்புவதில்லை.
இவ்வாறெல்லாம் பொய்யையும் புரட்டையும் இட்டுக் கட்டி எழுதும் உங்களை இறைவன் நாளை மறுமையிலாவது நிச்சயம் கேட்பான் அப்போது நான் உட்பட பலர் இறைவனிடம் செய்த உங்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு தீர்வினை கோருவோம். நிச்சயம் அதற்கான தீர்வு எங்களுக்கு அப்போது கிடைக்கும் என எதிர் பார்த்திருக்கின்றேன். அதனாலேயே உங்கள் எழுத்துக்களுக்கு பதில் தருவதற்கு விரும்புவதில்லை.
மற்றவர்களை மான பங்கப்படுத்தி எழுதுவது எவள் எவனுடனும் போனாலும் அதை செய்தியாக்கி எழுதுவது, சமூகத்தில் சரியானவன் செய்யும் வேலையை நீங்கள் பிழை கண்டு எழுதுவது, உங்களுக்கு உதவி செய்யாத, நீங்கள் சார்ந்த அரசியல் மற்றும் ஊடக கொள்கைகளுக்கு எதிரானவர்களை இழிவு படுத்த முனைவது, நீங்கள் உதவி கேட்டுச் சென்று உதவி செய்யாதவனை மிக மோசமாக இட்டுக்கட்டி எழுதி அவனை மான பங்கப்படுத்துவது, உங்கள் செய்திக்கு ஒருவன் மறுப்பு தந்து விட்டால் அவனை தேவையற்ற விதத்தில் விமர்சிப்பது, ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை செய்தியாக்கி கட்டுரையாக்கி எழுதுவது, யாராவது ஒரு கருத்தை உங்களிடம் கூறி விட்டால் அதை மிகவும் பெரிதாக்கி செய்தி எழுதுவது, பொய்யும் புரட்டும் இட்டுக்கட்டியும் சோடனைகள் செய்தும் எழுதுவது, நடக்காத ஒன்றை நடந்தது என்றும், செய்யாத ஒன்றை செய்தது என்றும் எழுதுவதுஇ பெண்களை மான பங்கப்படுத்தி எழுதுவது, உங்களுக்கு பிடிக்காதவர்களின் புகைப்படங்களை கேவலப்படுத்தும் வகையில் பிரசுரிப்பது ஊரில் சமூக சேவையாளர்கள், உலமாக்களை மிக மோசமாக விமர்சிப்பது, வாசகர் கருத்து எனக் கூறி உங்களின் சொந்தக் கருத்தை எழுதுவது, அனாமோதய இணையத்தளங்களில் உங்களுக்கு வேண்டத்தகாதவரின் செய்தி ஒன்று வந்து விட்டால் அதை உங்கள் பத்திரிகையில் பிரசுரித்து மான பங்கப்படுத்துவது இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்த சிறந்த ஊடக கலாசாரமாகும். இவற்றையெல்லாம் நீங்கள் எழுதுவதற்கு நீங்களே வைத்துக் கொண்ட பெயர்தான் ஊடக காவல் நாய்.
நீங்கள் இவ்வாறெல்லாம் எழுதி மற்றவர்களின் இரத்தத்தை குடித்தும், அவர்களின் மாமிசத்தை சாப்பிட்டுமுள்ளீர்கள் என்பதை நாளை மறுமை நாளிலாவது நீங்கள் தெரிந்து கொள்ளமுடியும். அந்த மறுமை நாளில் கைசேதப்படுவீர்கள்.
என்னைப் பற்றி இட்டுக்கட்டி தேவையற்ற விதத்தில் பல்வேறு செய்திகளை எழுதினீர்கள். எனது அரசாங்க தொழிலையும் இல்லாமாலாக்கி எனது ஊடக சேவையை கொச்சைப்படுத்தி என்னையும் எனது குடும்பத்தையும் வீதியில் நிற்க வைக்கலாம் என நீங்கள் காட்டிய ஆர்வமும் எழுதிய செய்திகளையும் நான் இலகுவில் மறந்து விடப்போவதில்லை.
மற்றவர்களின் பெயரில் முகநூல் ஒன்றை செய்யும் இழிவான செயலை நான் எப்போதும் செய்ததுமில்லை இன்னும் செய்யப்போவதுமில்லை என்பதை அல்லாஹ் மீது ஆணையாக நான் உங்களுக்கு தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
உம்மா வாப்பா தெரியாத அனாமோதய இணைய தளங்களுக்கு நான் செய்தி வழுங்குபவனுமல்ல, வழங்கப் போறவனுமல்ல. அந்த அனாமோதய இணைய தளங்களில் வரும் செய்திகளைக் கூட நான் பார்க்க விரும்புவதுமில்லை.
அண்மையில் உங்கள் தலைமையில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் அமைப்பொன்று ஆரம்பித்திருப்பதாக ஊடகங்களினூடாக அறிந்து கொண்டேன். நல்லது ஆனால் நீங்கள் நிலையாக எந்தவொரு சமூக நிறுவனங்களிலும் இருந்த வரலாறுகள் இல்லை. நீங்கள் அங்கம் வகித்த அத்தனை சமூக நிறுவனங்களையும் விட்டு வெளியேறி அந்த நிறுவனத்தினரையும் அதன் முக்கியஸ்தர்களையும் விமர்சித்த வரலாறும் உண்டு
உங்களின் கருத்தை அவ்வாறான சமூக நிறுவனங்களில் திணிக்க முற்படுவீர்கள். அதற்கு இசைவாக்கம் கிடைக்காவிட்டால் உடனே அதிலிருந்து வெளியேறியதாக அறிக்கை விடுவீர்கள். அல்லது அந்த நிறுவனத்தை கலைத்ததாக அறிக்கை விடுவீர்;கள். அந்த நிறுவனத்தின் முக்கியஸ்த்தர்கள் நிருவகாத்தினரை விமர்சித்து உங்கள் வழமையான பாணியில் பல கட்டுக்கதைகளுடன் வசை பாடி எழுதுவீர்;கள். சமூக நிறுவனங்களுடன் இணைந்து குழு ஒருமைப்பாட்டுடன் ஒத்துப் போகும் செயற்பாட்டு தன்மை கிஞ்சித்தும் உங்களிடம் கிடையாது.
எனினும் நீங்கள் தற்போது ஆரம்பித்துள்ள கிழக்கு மாகாண ஊடகவியலாளர் அமைப்பையாவது குழு ஒருமைப்பாட்டுடன் உங்களின் சொந்தக் கருத்தை திணிக்காமல் வழி நடாத்துங்கள். ஏனெனில் உங்களின் இந்த அமைப்பில் நமது சகோதர சமூகத்தைச் சேர்ந்த தமிழ் ஊடக நண்பர்கள் இருப்பதால் உங்களை வைத்து எங்களையும் அவர்கள் பிழையாக கருதக் கூடும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் கடந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் எவ்வளவு நாகரீகமாக எழுதுகின்றது என்பதை உங்களுக்கு நான் கூறி வைக்க விரும்புகின்றேன்.
அண்மையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட அந்த செய்தியினை ஊடகங்கள் எவ்வளவு ஊடக ஒழுக்கத்துடன் வெளியிட்டது என்பதை நீங்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. அதே போன்று முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பம் செய்ததாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது ஊடக ஒழுக்கத்துக்குள் நின்று நாகரீகமான ஒழுங்கில் அவற்றை செய்தியாக வெளியிடுவதை பாருங்கள்.
உங்களின் ஊடக ஒழுக்கம் தொடர்பில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரியான அமீர் ஹுஸைன் உங்களுக்கு எழுதிய மிகவும் காத்திரமான கடிதத்தை பார்த்தும் நீங்கள் உங்கள் எழுத்துக்களை நாகரீக ஒழுங்கில் அமைத்துக் கொள்ளத்தவறி விட்டீர்கள்.
அதே போன்று காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அகமட் லெவ்வை உங்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வைத்த மான நஸ்டஈட்டு வழக்கின் போது மதிப்புமிகு மாவட்ட நீதிபதியவர்கள் வழங்கிய இடைக்கால தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீள மீள ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் உட்பட போரத்தினால் உங்களின் ஊடகம் தொடர்பில் உங்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளை புறந்தள்ளியே நடந்து வந்துள்ளீர்கள்.
இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு முறை சிந்தித்துப் பார்த்திருந்தால் பொய்யையும், புறட்டையும், கட்டுக்கதைகளையும் இட்டுக்கட்டி எழுதும் இழி செயலை செய்து வர மாட்டீர்கள்.
நான் எழுதும் இந்த கடிதத்துக்கும் நீங்கள் ஆயிரம் தலை கால் வைத்து எனக்கு இல்லாத ஒன்றை இட்டுக் கட்டி எழுதுவீர்கள். ஏனெனில் அவ்வாறு ஏற்கனவே நீங்கள் எழுதியுள்ளதால்.
இறுதியாக நீங்கள் பல்வேறு ஊகங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் முஸ்தபா என்பவரின் பெயரில் முகநூல் ஒன்றை நான் திறந்து அதில் உங்களைப் பற்றி எழுதியதாகவும் அதை நானே திரை மறைவில் செய்து வருவதாகவும் நீங்கள் எழுதியது தொடர்பில் உங்களை பகிரங்கமாகவோ அல்லது இரகசியமாகவோ சத்தியம் செய்வதற்காக அழைக்கின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் என்று கூறப்படும் முஸ்தபா என்பவரின் பெயரில் நான் முகநூல் ஒன்றை திறந்து அதை இயக்குகின்றேன் என நீங்கள் சத்தியம் செய்ய வேண்டும். நான் அவ்வாறில்லை என அல்லாஹ் மீது ஆணையாக சத்தியம் செய்வேன். சத்தியம் செய்வதற்கான பதிலை உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றேன்.
யாருக்கும் அநியாயம் செய்து யாருடைய இரத்தத்தையும் குடித்து, யாருடைய மாமிசத்தையும் சாப்பிட்டு வாழுபவன் அல்ல நான் என்பதை மீண்டுமொரு உங்களுக்கு கூறி உங்களின் பொய்யான எழுத்துக்களுக்கும் கட்டு கதைகளுக்கும் சோடனைகளுக்கும் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டி விடை பெறுகின்றேன்.
நன்றி
இவ்வண்ணம்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
பிரதிகள்:
தலைவர் செயலாளர் ஜம் இய்யத்துல் உலமா காத்தான்குடி.
தலைவர் செயலாளர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி,
அமீர் ஹுஸைன், விசாரணை அதிகாரி, பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, கொழும்பு
தலைவர் செயலாளர் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம், கொழும்பு
மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள், காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மார்க்கப்பிரச்சார அமைப்புக்கள், காத்தான்குடி முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்கள். காத்தான்குடியிலுள்ள சமூக நிறுவனங்கள் ஆகியோரின் பார்வைக்காக
Leave a reply to noordeen Cancel reply