காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல்

hospital– நமது நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரியாவிடை வைபவமும் இன்று 22.03.2015 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணி தொடக்கம் பி.ப 02:30 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது. காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.SMBA.றூமி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கடந்த 2013/2014 ம் ஆண்டு காலப்பகுதிகளில் வைத்தியசாலையில் கடமையாற்றி வேறு இடங்களுக்கு இடமாற்றலாகிச் சென்ற அத்துடன் ஓய்வூதியத்தில் சென்ற வைத்தியர்கள், தாதியர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட மற்றும் ஏனைய பதவிகளில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் என 35 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

hospital

மேற்படி நிகழ்வில் உளநல பிரிவுப் பொறுப்பு வைத்தியர் Dr. சுசிகலா பரமகுருநாதன் ‘மகிழ்ச்சியை நோக்கி’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பொது வைத்திய நிபுனர் Dr.P.K.சிசிர குமார முன்னால் வைத்திய அத்தியட்சகர் Dr. T. கௌரிசங்கரன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த Dr. MMM. அயாஸ் அவர்கள் சிறப்பான கவிதை ஒன்றினையும் தொகுத்து வழங்கினார். அத்துடன் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

hospital1

hospital2

Published by

Leave a comment