ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி மகளிர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை வரவேற்கும் நிகழ்வு

slmc– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி மகளிர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை வரவேற்கும் நிகழ்வு 20-03-2015 வெள்ளிக்கிழமை காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸாவின் காத்தான்குடி இல்லத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்ஸாவின் தலைமையில் இடம்பெற்ற இவ் வரவேற்பு நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டார்.

slmc

இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தப்பட்டு காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸாவினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

slmc (3)

இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சாந்தி முஹைதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி மகளிர் அணி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

slmc (2)

Published by

Leave a comment