காத்தான்குடி: தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் டுவிட்டர்களிலும் பேஸ்புக்குகளிலும் காலத்தை கடத்துகின்றனர். இவர்கள் மார்க்க கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி அல் மத்ரஸதுல் இப்றாகிமிய்யா குர்ஆன் மத்ரஸாவில் 19வது பரிசளிப்பு விழா அதன் தலைவர் கே. எம்.எம். அபுல் ஹசன் தலைமையில் நேற்று 19-03-2015 இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மார்க்க கல்வியுடன் சேர்த்து ஏனைய உலக கல்வியையும் கற்க வேண்டும் ஏனெனில் பிள்ளைகளின் ஒழுக்கவிழுமியங்கள், மார்க்க அறிவு, பெரியோரை மதிக்கும் தன்மை அப்போதுதான் பேணப்படும் வெறுமனே உலக கல்வியை மாத்திரம் கற்பதால் ஏற்படாது எனவும் இப்றாகிமிய்யா குர்ஆன் மத்ரஸா அதன் நிறுவாகத்தினரால் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது இது தொடர்ந்து இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வுக்கு விசேட சொற்பொழிவாளராக அஷ்செய்ஹ் ஸெட் எம் பாஸில் முப்தி குர்ஆன் ஓதுவதன் மகிமை தொடர்பாக விரிவுரையாற்றினார்.
ஜாமியத்துல் பலாஹ் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ஸி.எம். அமீன் பலாஹி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம்.ஐ எம் சுபைர் மஸ்ஜிதுல் மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் பேஸ் இமாம் எம்.ஐ. ஆதம் லெவ்வை பலாஹி, குர் ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்க பரிசோதகர் எச் எம் எம் சாஜஹான் பலாஹி உட்பட உலமாக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டன.
குர்ஆனை கற்பித்த முஅல்லிம்களான எம்.எஸ்எம் அப்துல்லா மற்றும் எம் ஏ எம் அன்பாஸ் ஆகியோருக்கு அன்பளிப்புகள் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டதுடன், குர்ஆன் பரீட்சையில் சித்தியைதிய 36 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச்சின்னங்களும் இதன்போது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
Published by



Leave a comment