“முதலமைச்சர் பதவி என்பது அடையாளத்தை காட்டுகின்ற ஒரு பதவியாகும்”: முதலமைச்சர் ஹாபீஸ் நசீர்

hafeez– ஏ.எல். டீன்பைரூஸ்

காத்தான்குடி: முதலமைச்சர் பதவி என்பது அடையாளத்தை காட்டுகின்ற ஒரு பதவியாகும் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டிய சிந்திக்க வேண்டிய காலமும் இதுவேயாகும் எமது ஒற்றுமையில்தான் எமது எதிர்கால வெற்றி தங்கியுள்ளது என (20.03.2015 வெள்ளிக்கிழமை) இன்று காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற விசேட உரையில் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் இன் விசேட அழைப்பின் பெரில் காத்தான்குடிக்கு விஜயம் மேற் கொண்ட முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்கள் இன்று ஜூம்ஆ தொழுகையின் பின் பல ஆயிரக்கான மக்கள் மத்தியில் விசேட உரையாற்றினார்.

அவர் தனதுரையில்….

காத்தான்குடி என்பது என் வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத ஊராகும் நான் ஒரு ஹாபிழ் ஆனதும் இந்த காத்தான்குடியில்தான்.

இங்கு குர்ஆனை கற்கும் போது எனக்காக துஆ செய்த தாய்மார்கள் காத்தான்குடியில் பல பேர் உள்ளனர். காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் கல்வி கற்கம் போது அதன் ஆரம்ப வளர்ச்சிக்காக நாங்கள் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை சிறு வயதில் மேற் கொண்டோம்

hafeez

ஆல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்யக் கூடிய பாக்கியம் எனக்கு காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வின் மூலமாகவே கிடைத்தது. சுங்கைக்குரிய மௌலானா மௌலவி அப்துல்லா ஹஸறத் அவர்கள் தான் எனது ஆசான் அவரகளையும, இன்னும் பல எலமாக்களையும், என்னால் என்றுமே மறக்க முடியாது அவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை அவர்களின் மறுமைவாழ்விற்காக பிரார்திப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதாரம், அபிவிருத்தியில் காத்தான்குடி ஓர் அளவு இலக்கை எட்டியுள்ளது மாத்திரமின்றி முழு முஸ்லிம் ஊர்களுக்கும் ஓர் அடையாளமான ஊர்தான் காத்தான்குடி எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

mettaippallai

காத்தான்குடி மக்கள் எனக்காக துஆ செய்யுமாறு முதலமைச்சர் வேண்டிக் கொண்டதுடன் தனிப்பட்ட ரீதியாக விசேடமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இதன் போது முன்னால் கிழக்குமாகாண சபை உறுப்பினர் யு.எல்.என்.எம்.முபீன் உட்பட முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு உறுப்பினர்ளும் பிரசன்னமாகி இருந்தனர்.

Published by

Leave a comment