சாதனையாளர்கள் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

federationஎம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கல்வி அபிவிருத்திச்சபை  வருடாந்தம் நடாத்தும் சாதனையாளர்கள் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இவ்வருடமும் இடம்பெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின்  செயலாளர் ஏ எல் எம் சபீல் நளீமி தெரிவித்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை (21.03.2015) ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சென்ற முறை தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், மூத்த சமூக சேவையாளர்கள் மற்றும் கல்விமான்களும் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித்தலைவர் சட்டத்தரணி ஏ எல் அப்துல் ஜவாத் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment