கிழக்கு மாகாண முதலைச்சரின் தீர்மானத்திற்கோர் சமர்ப்பனம்

eastern hafizஇது நமது கதை
அண்மையில் நானோர்
அபலையைக் கண்டேன்
அவளது கண்ணீரை
என் பேனாவால் நிரப்பினேன்
சமீனா ஈமான் கொண்ட எங்கள் சகோதரி
மூத்தவள் என்பதால் பூத்தது முதலாய்
காத்தது வீடு அவித்தது சோறு

பூவாடை வீசியதும் பாவடை கட்டியதும்
பள்ளி வாழ்க்கையில் புள்ளி விழுந்தது
வறுமை வலைக்குள் வழுக்கிய போது
வாழ்க்கை அவளுக்கு வெறுத்துப் போனது
வழக்கம் போலவே அவளும் பதினாறு வயதில்
பஹ்ரையின் போக பாஸ்போட் எடுத்தால்

காணி விற்று கரைந்த காசு
காதர் ஏஜன்டுக்கு காணிக்கையானது
இறுதியில் ஒருநாள் சமீனா என்பவள்
ஈமானை விற்று ஓமான் போனாள் பறந்தாள்
சமீனாவைக் கண்ட அரபியின் உள்ளம்
ஆனந்தத்தால் அதிர்ந்து போனது

வாழ்க்கையை விற்று வாகனம்
ஏறிய பாசமலரில் வடுக்கல் விழுந்தன
மாசு பட்ட மகளின் காசு கண்டதும்
மகிந்த தந்தை மாப்பிள்ளையானார்
டிவி, டெக்கு, சிகரட்டு கட்டு
தட்டு வீடு இது தந்தையின் பாடு
இரண்டாம் மனைவியோடு இன்ப வாழ்வு
இருந்த மனைவியும் ஐந்து மக்களும் பட்டபாடு

ஆறு வருடங்களில் சமீனா நாடு வந்தாள்
ஈமான் போனாலும் சாமான் வந்தது
கொண்டு வந்தது உண்டு முடிந்தது
தந்தைக்கும் சாச்சிக்கும் தகராறு நடந்தது
தட்டிய தட்டில் தலை வெடித்தது
தந்தையின் வாழ்வு சாச்சியால் முடிந்தது

ஆருமற்ற சமீனாவோ ஆறுதல் பெற்றிட
ஆள் தேடினால் அதுவும் கணவாய் போனது
ஒதுக்கிய சமூகத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டவள்
முந்தானை விரித்து வாழ முடிவெடுத்து விட்டாள்…

ஓ…..ஏசி அறையில் ஈசிசேரில்
தத்துவம் போசும் வித்தகர் கூட்டமே
அக்கீதா சர்ச்சைகளில் அடித்துக் கொள்பவரே
ஆயுள் ஜமாஅத்தில் அமேரிக்கா செல்பவர்களே
பறந்து திரியும் சொற் புரட்டர்களே
எங்கள் சமீனாக்களுக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகின்றீர்கள்
எப்போது அவர்களை இஸ்லாமிய இலட்சியப் பெண்களாய்
வாழவைக்கப் போகின்றீர்கள்????
துணிந்தவர் சொல்லுங்கல்….

SM. லத்தீப்,
காத்தான்குடி

Published by

Leave a comment