காத்தான்குடி: கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் அழைப்பில் விஜயம் செய்ய இருப்பதாக மாகாண நபை உறுப்பினரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காத்தான்குடிக்கு வருகை தரும் முதலமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் விசேட உரை நிகழ்தவுள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் (காத்தான்குடி அமானா வங்கிக்கு அருகாமையில்) காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் வெள்ளி பின்னேரம் 05.00 மணிமுதல் பொது மக்களினுடனான கலந்துரையாடலையும், சந்திப்பொன்றையும் மேற்கொள்ளவுள்ளார்.
மேற்படி இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அழைப்பு விடுத்துள்ளார்.
Published by

Leave a comment