யாழ்ப்பாணம்: 30 வருடமாக தமிழ் மக்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது மீண்டும் அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்படுகின்ற தீர்வு திட்டத்திற்கு முஸ்லிம்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள். அதே போல் இந்த தீர்வில் முஸ்லிம்களின் சரியான பங்கும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், யாழில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பில் இங்கிருக்கின்ற அதிகாரிகள் தமது சேவையினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒஸ்மானிய பாடசாலைக்கான இரு மாடிக்கட்டிடம், மற்றும் 2014 ம் புலமை காட்டிய மாணவர்களை பாராட்டும் நிகழ்வ என்பன பாடசாலை கேட்போர் மண்டபத்தில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் இங்கு உரையாற்றும் போது –
இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தில் யாழ் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது தொடர்பில் நியாயம் வழங்கப்பட வேண்டும், இந்திய உயர் ஸ்தானிகராக இருந்த அசோக் கே கான்த் அவர்கள் 1000 வீடுகளை யாழ் முஸ்லிம்களுக்கு தரவதாக உறுதியளித்திருந்தார்.ஆனால் இவை நடை முறை;கு வரவில்லை.அதனை தடுத்தவர்கள் யார்,ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
தமிழர்களும், முஸ்லிம்களும் மிகவும் உறவுடன் வாழந்த மாவட்டம் யாழ்ப்பாணமாகும். ஆனால் இன்று சிலர் அதனை பிரித்து அதன் மூலம் பிளவினை ஏற்படுத்தி வைக்க முயல்கின்றனர். இன்று கட்டப்பட்ட எத்தனையோ கட்டிடங்களை கடந்த காலத்தில் ஆளுநரிடத்தின் இருந்து நாங்கள் பெற்று கல்வி மேம்பாட்டுக்கு உதவி புரிந்துள்ளோம்.எம்மில் இனவாதம் இல்லை. இந்த பாடசாலைகளில் தமிழ் பேசும் மாணவர்களே கற்கின்றனர். இவர்கள் சிறந்த உயர் பதவிகளை வகிக் வேண்டும். அது தான் எமது நோக்கம்.
இன்று வடமாகாண அமைச்சரவையில் கற்றவர்கள் இருக்கின்றனர் மாகாண கல்வி அமைச்சர கற்றவர், அது போன்று மன்னாரை சேர்ந்த மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வர்ன ஒரு சட்டத்தரணி, இவர்களை போன்றவரிகளின் பங்களிப்பு எமது வடமாகாணத்தின் எல்லாத் துறை மேம்பாடுகளுக்கும் இன்றியமையாதது என்பதை கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.
வடமாகாண முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்களிடத்தில் நாம் வேண்டிக்கொள்வது வடக்கில் வாழும் மஸ்லிம்களது தேவைப்பாடுகள் தொடர்பில் உங்களது நேர்மையான பங்களிப்பு இருக்க வேண்டும், நான் அரசியலுக்கு விரும்பி வந்தவன் அல்ல, வடக்கில் வாழந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அகதி முகாம்களில் எதிர்கொள்ள சொல்ல முடியாது துன்பங்களை கண்டு அவற்றை நிவர்த்திக்க வேண்டும் என்பதினால். ஆதலால் தமிழ் மக்களாக இருந்தாலும், இஸ்லாமியராக இருந்தாலும் அவர்கள் தேவைகளை பெற வருகின்ற போது அதற்கு நாம் சிரம் தாழ்த்தி அந்த பணிகளை செய்கின்றாம்.
ஆனால் இன்று சிலர் இனவாதத்தை பேசுகின்றனர். இந்த மக்களுக்கு எம்மால் செய்யப்படும் சேவைகளை தடுக்க முயற்சிக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் அவர்களுக்கே அpழவு பாiதையினை அமைத்துக்கொள்கின்றனர் என்று கூறிய அமைச்சர் றிசாத் எமது மக்கள் இவ்வாறான கதைகளுக்கு அடிபணிபவர்கள் அல்ல, ஒற்றுமையினை நேசிக்கும் எமது மக்களே வெற்றி பெறுவார்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
Published by

Leave a comment