அமைதிக்கு திரும்புகிறது காத்தான்குடி…

kattankudy2– நமது நிருபர்

காத்தான்குடி: உலககக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் நிறைவுக்கு வர இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், 1980 களில் இருந்து இன்றுவரை காத்தான்குடியில் இருந்துவரும் இலங்கை-பாகிஸ்தான் கிரிக்கட் இரசிகர்களின் போட்டிகளும் நட்புச் சண்டைகளும் முடிவுக்கு வருகின்றன.

காலிறுப்போட்டியில் அதிர்ச்சித் தோல்வியையும், மிக மோசமான உலகக் கிண்ணத் தோல்வியைiயும் தென்னாபிரிக்க அணியுடன் சந்தித்த இலங்கை அணியைத் தொடர்ந்து, இன்றைய மற்றுமொரு காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்து பாகிஸ்தான் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது.

குறிப்பாக உலகக் கிண்ண இருபது20 போட்டிகள், ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை கிரிக்கட் அணி இரசிகர்களுக்கும், பாகிஸ்தான் அணி ஆதரவு இரசிகர்களுக்கும் இடையில் நட்புச் சண்டை ஆரம்பமாகி, இறுதியில் பட்டாசு ஒலிகளுடனும், பிரமாண்டமான ஊர்வலத்துடனும் இரசிகர் போட்டி நிறைவுக்கு வரும்.

fireworks (3)

ஆனால், அரை இறுதிப்போட்டியை நெருங்க முடியாமல், பரிதாபகமாக குறித்த இரு அணிகளும் நேரகாலத்தோடு சொந்த நாடு திரும்புவதால், இரு அணியின் ஆதரவாளர்களும் சோர்வு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

கிரிக்கட் சுற்றுப்போட்டி என்றால் எப்போதும் கலகலப்பாக இயங்கும் காத்தான்குடி கடற்கரை வீதி, இலங்கை அணியின் இரசிகர் காரியாலயமான ‘மொடர்ன் சதுக்கம்’ தற்பொழுது சோர்ந்து காணப்படுகிறது.

தற்பொழுது இரு அணியின் இரசிகர்களினது எதிர்பார்ப்புக்களும் “இந்தியா கிண்ணத்தை வெல்லக்கூடாது” என்ற ஒரே எதிர்பார்ப்பில் ஒன்றிணைந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இதுவரை இருந்து வந்த இருதரப்பு இரசிகர்களின் கருத்துப் போட்டிகளும் இன்றோடு நிறைவுக்கு வருகின்றன.

“தென்ஆபிரிக்கா உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு பலரிடத்தில் இருந்த போதிலும், ஒன்றில் நியுசிலாந்தையோ அல்லது மேற்கிந்தியத் தீவுகள் அணியையோ அவர்கள் அரை இறுதிப்போட்டியில் சந்திக்க வேண்டிய மற்றுமொரு போட்டி காத்திருக்கின்றது.

நியுசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் இதுவரை உலகக் கிண்ணத்தை வெற்றிபெறவில்லை.

அரை இறுதி வாய்ப்புக்களை அறிய சந்தர்ப்பங்களால் தவறவிட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இரு அணிகளும், நாளைய போட்டியில் நியுசிலாந்து மேற்கிந்தியத் தீவு அணியை வெற்றிபெற்றால், அரை இறுதிப்போட்டியில் நியுசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் மோதும். காத்திருப்போம் நாளைய போட்டிவரை.

எப்படி இருந்தபோதிலும் கிரிக்கட் அன்புச்சண்டைகள் நிறைவடைந்து காத்தான்குடி தற்பொழுது அமைதிக்குத் திரும்பியிருக்கின்றது. இவ்வுலகக் கிண்ண வெற்றியில் காத்தான்குடி கிரிக்கட் இரசிகர்களின் பங்களிப்பு இருந்தபோதிலும், உலகக் கிண்ணத்தை வெற்றியீட்டும் நாட்டிற்காக பட்டாசுகள் வெடிக்க வைக்கவோ, ஊர்வலம் எடுக்கவோ எவரும் முன்வரமாட்டார்கள் என்பது திண்ணம்!

Published by

Leave a comment