– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: திட்டமிடப்படாத, முறையற்ற அபிவிருத்தி காரணமாக தொடர்ந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுவருகின்ற சில வீதிகளை (14.03.2015) NFGGயின் நகரசபை மற்றும் சூறாசபை உறுப்பினர்கள் பார்வையிட்டனர். காத்தான்குடி 6, 162 கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சில வீதிகள் குடியிருப்பாளர்களின் முறைப்பாட்டுக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க இவ்வீதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
இவ்விஜயத்தின்போது காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MHAM. மிஹ்லார், PMGGயின் சூறாசபை உறுப்பினர்களான MYM. ஷரீப் மற்றும் AHM. றிபாய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வீதி அபிவிருத்தியின் பின்னர் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக குடியிருப்பாளர்களிடம் கலந்துரையாடப்பட்டது.
குறித்த வீதிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொங்கிறீட் வீதிகளாக நகரசபையினால் புனர்நிர்மானம் செய்யப்பட்டிருந்தது. எனினும் திட்டமிடப்படாத முறையற்ற அபிவிருத்தியின் காரணமாக குறித்த வீதிகள் ஒரு நாள் மழைக்கே வெள்ளக்காடாக மாறி காட்சி தருவதுடன் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலும் வீண்விரயமாக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் விசனம் தெரிவித்தனர்.
இப்பிரச்சனைகளை உரிய முறையில் கையாண்டு, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு NFGG நடவடிககைகளை மேற்கொள்ளுமென நகரசபை உறுப்பினரினால் குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை இதேநிலையில் காணப்படும் காத்தான்குடி-6,காசிம் போடியார் லேன். பாவா லேன் மற்றும் அல்அமீன் வீதியின் 4,5,6ம் குறுக்கு வீதிகள் என்பனவும் பொதுமக்களின் வேண்டுகோளிற்கிணங்க நேற்றைய தினம் பார்வையிடப்பட்டன.
Published by




Leave a comment