சஊதி அரேபியாவின் சஊத் பல்கலைக்கழகத்தின் கிழக்காசியாவுக்கான தொலைக்கல்வி கிளை காத்தான்குடியில்

saud– அல்மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: சஊதி அரேபியாவின் அல் இமாம் சஊத் பல்கலைக்கழகத்தின் கிழக்காசியாவுக்கான தொலைக்கல்வி கிளையொன்றினை காத்தான்குடியில் திறக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியுடன் இணைந்ததாக இந்நிலையம் இயங்குமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.

இந்நிலையத்தினை அமுல்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடுவதற்கு அல் இமாம் சஊத் பல்கலைக்கழகத்தின் தொலைக்கல்வி பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அஹ்மத் அஸ்ஸுதைஸ் மற்றும் சர்வதேச மனித வள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்துக்கான பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் காலித் அத்தாவூத் ஆகியோர் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கு 16.03.2015 திங்கட்கிழமை விஜயம் செய்யவுள்ளனர்.

காத்தான்குடி அல் மனார் அர் ராஷித் கேட்போர் கூடத்தில் 16.03.2015 திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு மட்டக்களப்பு, அம்பாரை, பொலந்நறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த உலமாக்கள் அழைக்கப்பட்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் கூறினார்.

Published by

Leave a comment