‘அமைச்சர் றிஷாத்திற்கு அரசாங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்’: அமைச்சர் ரன்ஜித் மத்தும

ranjith  rishad– இர்ஷாத் ரஹ்மதுல்லா

மன்னார்: நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று தேவையென்று சிறுபான்மை மக்கள் ஏக்கம் கொண்டிருந்த போது,அதனை உறுதிப்படுத்துவதற்கு துணிந்து அன்று ஆட்சியில் இருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலனா அவரது கட்சி எடுத்த துணிகரச் செயலே மாற்றத்திற்கான காரணமாகியது.அதற்கு இந்த அரசாங்கம் சார்பில் தமது நன்றிகளை தெரிவிக்கின்றேன் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார மன்னாரில் தெரிவித்தார்.

மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் மத்தும பண்டார பேசுகையில்-

இன்று இந்த மேடையில் பல கட்சிகளை சேர்ந்தவர்களும்,பல இனத்தை சேர்ந்தவர்களும் ஒன்றாக இருக்கின்றதை கானுகின்ற போது மகிழ்வாக இருக்கின்றது.கடந்த கால அரசியலை பார்க்கின்ற போது அதனை காணமுடியவில்லை தேசிய ஒற்றுமை தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சி என்றும் சிந்தித்து வந்துள்ளது.

ranjith  rishad

1948 ஆம் ஆண்டு ஜக்கிய தேசிய கட்சி உருவாக்கப்பட்டது.அன்றும் தமிழ்,முஸ்லிம்,சிங்களத் தலைவர்கள் இவ்வாறு ஒற்றுமையாக இருந்தார்கள்.வன்னி மாவட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம்.அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இந்த மாவட்டதினை பொருளாதார மத்திய நிலையமாக மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கின்றனர்

இவற்றை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலையைிலான இந்த அரசாங்ம் இருக்க வேண்டும்.அமைச்சர் றிசாத் பதியுதீனை பொறுத்த வரை அவர் ஒரு திறமைசாலி மற்றும் துணிந்து செயற்படக் கூடியவர்.முதலாவதாக ஆட்சி மாற்றத்திற்கான முழுமையான பங்களிப்பினை அவர் தான் வழங்கினார்.அதன் பிறகு தான் ஏனைய சிறுபான்மை கட்சிகள் எமக்கு ஆதரவு நல்கின என்றும் கூறிய அமைச்சர் யாழிலிருந்தும்,மன்னாரிலிருந்து கொழும்புக்கு 4.30 மணித்தியாலயங்களில் செல்லக் கூடிய புகையிரத சேவைகள் எதிர்காலத்தில் இடம் பெறும் அதே போல் குளிரூட்டப்பட்ட இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றும் போது –

மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சரின் பணிகளை மாகாணத்தில் கொண்டு செல்ல நல்ல செயற்திமை கொண்ட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் இருக்கின்றார்.இன உறவினை பாதுகாத்து இந்த வன்னியில் அவர் இனபாகுபாடுகள் இன்றி செயலாற்றக் கூடிய ஒருவராக அவரை பார்க்கின்றேன்.

ஆனால் சிலர் இனவாதத்தையும்,பிரதேசவாதத்தையும் பேசி மக்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்க முனைகின்றனர்.அவர்கள் அதனை கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது கோறிக்கைவிடுத்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் பஸ் டிப்போவுக்கு விஜயம் செய்த அமைச்சர் மத்துமபண்டார டிப்போவின் தேவைப்பாடுகள் குறித்து அதிகாரிகளிடத்தில் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பலரும் உரையாற்றினர்.

Published by

Leave a comment