காத்தான்குடி: முன்னால் பிரதிஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல்ஆனைக் குழுவிடம் NFGG முறைப்பாடு செய்த பிற்பாடு காத்தான்குடி அரசியல் நிலவரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தன் மீது ஒரு சதமாவது ஊழல் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக ஹிஸ்புல்லாஹ் அறிவித்துள்ளார்.
அவரது கருத்தை தொடர்ந்து முன்னால் கிழக்கு மாகண சபை உறுப்பினர் KLM. பரீட் J.P. ம் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒடுங்குவதாக அறிவித்துள்ளார். இன்று அல்லது நாளை தவிசாளர் அறிவிக்கலாம் ….??? சவால் விடுபவர்கள் ஹிஸ்புல்லாஹ்வின் இலஞ்ச ஊழல் ஆனைக் குழுவினால் நிருபிக்கபடாவிட்டாள் NFGG அரசியலில் இருந்து ஒதுங்குமா என கேள்வி எழுப்புகின்ரனர். இந்த கேள்வி நியாபூர்வமானதா ??? என்று பார்த்தால், அதில் எந்த நியாயமும் இல்லை.
NFGG கடந்த 18.01.2015 நடாத்திய ஊடகவியளார் மாநாட்டில் NFGG தவிசாளர் அப்துர் ரகுமான் உறையாற்றியபோது குறிப்பிட்டார், ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல் மோசடிகள் அதிகார துஸ்பிரயோகம் நிரூபிக்க ஹிஸ்புல்லாஹ் ஒத்துழைத்தால் உள்ளூர் விசாரணை பொறிமுறை ஒன்றின் மூலம் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழலை நிருபிக்க முடியும் என்றார். இதற்கு ஹிஸ்புல்லாஹ் தயார் என்றால் அந்த விசாரணை எப்படி அமைய வேண்டும் என்று முன் மொழிய முடியும் என்றார் அப்துர் ரகுமான்.
இந்த கேள்விக்கு ஹிஸ்புல்லாஹ்வும் அவருக்காக அரசியலில் இருந்து ஒதுங்க தயாராக உள்ளவர்களும் விடுத்து இருக்க வேண்டிய பதில் ஆம் நாங்கள் இந்த உள்ளூர் பொறிமுறை விசாரனைக்கு தயார், அதில் NFGGயால் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல், அதிகார துஸ்பிரயோகம் நிரூபிக்க முடியாமல் போனால் NFGG அரசியலில் இருந்து ஒதுங்குமா? என்று கேட்டு இருந்தால் அது நியாயம். நாங்களும் வரவோற்று இருப்போம். அதற்கு பதிலாக உங்களிடம் ஆதாரம் இருந்தால் இலஞ்ச ஊழல் ஆனைக்குழுவிடம் சமர்பியுங்கள் என்று அதில் இருந்து நழுவி விட்டு இன்று சவால் விடுவதில் என்ன நியாயம் உள்ளது. NFGG விடுத்த உள்ளூர் பொறிமுறை விசாரணை சவாலுக்கு முன்னால் பிரதி அமைச்சர் கொடுத்த பதில் நாங்கள் உள்ளூர் பொறிமுறை விசாரணைக்கு தயார் இல்லை என்றும், உங்களிடம் எனது ஊழல் இருந்தால் இலஞ்ச ஊழல் ஆனைக்குழுவிடம் முறைப்பாட்டை செய்யுமாறும் வேண்டி இருந்தார்.
அதற்கு அமைவாக NFGG இருக்கும் ஆதாரத்தை வைத்து இலஞ்ச ஆனைக்குழுவிடம் முறைப்பாட்டை செய்துள்ளது. இனி சட்டம் கடமையை செய்யும். ஆனால், இலஞ்ச ஊழல் ஆனையாளர் தில்ருக்க்ஷி டயஸ் விக்ரமசிங்க வழங்கிய தகவலின்படி இலஞ்ச ஊழல் ஆனைக்குளுவுக்கு 2 மாதம்களுக்குள் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அனைத்து விடயம்களும் விசாரிக்கப்பட தமது தினைக்களத்துக்கு ஆள்பற்றாக்குறை இருப்பதாவும் அனைத்து விடயம்களையும் உடனடியாக கையால முடியாது என்றும், கால தாமதம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
NFGG அரசியலில் இருந்து ஒதுங்குவதாக இருந்தால் அவர்கள் மீது தப்பு இருக்க வேண்டும். NFGG அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று சவால் விடுக்கும் சவால் வாதிகளுக்கு நான் விடுக்கும் சவால் NFGG தவிசாளர் ஒரு சதம் ஊழல் செய்தார்கள் அல்லது அதற்கு துனையாக இருந்தார்கள் என்று உங்களால் நிரூபிக்க முடியுமாக இருந்தால் நீங்கள் இலஞ்ச ஊழல் ஆனைக்குழுவுக்கு போக தேவை இல்லை. நமது ஊரில் உள்ள சம்மேளத்துக்கு கடிதம் ஒன்றை கொடுங்கள் அப்துர் ரஹ்மான் வர மறுத்தாலோ அல்லது அவர் எழும்பி நடக்க முடியாமல் இருந்தாலும் நாங்கள் அவரை தூக்கி கொன்டு வந்து தருவோம்.
விசாரனை செய்யுமாறு இதே வழிமுறையில் ஹிஸ்புல்லாவின் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்பலாமா ? ஹிஸ்புல்லாஹ் ஊழல் செய்ததாக NFGG மட்டும் சொல்லவில்லை. அவருடன் அன்மைக்காலமாக நெருக்கமாக இருந்த ஹிஸ்புல்லாஹ் மூலம் அரசியலுக்கு வந்த கிழக்கு மாகண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் பகிரங்கமாக சொல்கிரார். ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல் தன் வசம் இருப்பதாகவும் தேவை என்றால் சம்மேளனம் தஃவா
அமைப்புக்கள் முன் நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் (அவர் கூட இருந்த படியால் அவருக்கு தெரியும் எங்கு எப்படி எவ்வாறு ஊழல் நடந்துள்ளது என்று ) ஹிஸ்புல்லாஹ் ஒரு சதமாவது நான் ஊழல் செய்தால் அரசியலில் ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். ஆகவே சிப்லி பாறூக் நிச்சயம் இந்த விடயம்களுக்கு அவருடையை ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இலஞ்ச ஊழல் ஆனைக்குழு சிப்லி பாறூக் அவர்களிடமும் விசாரணை நடாத்த வேண்டும். இலஞ்ச ஊழல் ஆனைக்குழு ஹிஸ்புல்லாஹ்வின் ஊழலை நிரூபிக்குதோ இல்லையோ NFGG எந்த நிமிடமும் காத்தான்குடி மக்கள் முன்பாக நிரூபிக்க தயாராக உள்ளது.
முன்னால் கிழக்கு மாகண சபை உறுப்பினர் பரீட் J.P அவர்களே !!!
ஹிஸ்புல்லாஹ் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்க இது ஒரு பொன்னான சந்தர்ப்பம் அல்லவா !!! உடனடியாக உள்ளூர்பொறிமுறை விசாரணைக்கு ஏற்பாடு செய்யுங்கள். நியாயமற்ற கேள்விகளுக்கு நிரந்தரமான முடிவுகள் எடுப்போம்.
– குற்றம் யார் செய்தாலும் குற்றமே –
ஏ. எம். பர்ஸாத்
காத்தான்குடி.
Published by




Leave a comment