பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் உண்மைக்கு புறம்பான கருத்துக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் ஜவாஹிர் கண்டனம்

northஇர்சாத் ரஹ்மத்துல்லாஹ்

வவுனியா: இலங்கையில் இந்தியா நடை முறைப்படுத்தும் வீடமைப்பு திட்டத்தின் தெரிவு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளிப்படுத்திவருவதை கண்டிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் ஜவாஹிர் தெரிவித்தார்.

வவுனியாவில் சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த  குற்றச்சாட்டு இன்று நேற்று இருந்துவருவது அல்ல, 2010 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் விடமைப்பு திட்டத்தை நடை முறைப்படுத்த ஆரம்பித்தது முதல் அமைச்சர் றிசாத் பதியுதீனை இலக்கு வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அபாண்டங்களை சுமத்தி வருகின்றனர்.

வடக்கில் யுத்தத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு இந்த வீடமைப்பு திட்டத்ததை நடை முறைக்கு கொண்டுவந்தது. இதில் முஸ்லிம்களும் உள்ளடக்பப்பட வேண்டும் என்று யுத்தத்தால் முற்று முழுதாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமக்கும் இந்த வீடுகளை பெற்றுத்தருமாறு கோறிக்கைவிடுத்தனர்.

இம்மக்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து வெளியேறியதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மீண்டும் தமது மண்ணுக்கு மீள்குடியேறவந்தனர். அங்கு வந்து பார்த்த போது வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது. 20 வருடங்களின் தமது மண்ணுக்கு வந்த போது இங்ருந்து சென்ற மக்களின் எண்ணிக்கையினை விட அவை இரு மடங்குகளாக அதிகரித்து காணப்பட்டன. அந்த அதிகரிப்புக்கு ஏற்ப காணிகளை அரசு சட்ட ரீதியான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அவையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய காழ்ப்புணர்வு கொண்டவர்களினால்  தடுக்கப்பட்டு இன்னும் அந்த காணிகளை பெற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர்.

வடக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு 7500 வீடுகளை வழங்கு இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயத்தின் திட்டம் இருந்த போதும், அது இதுவரை வழங்கப்படவில்லை. இந்த வடக்கில் முஸ்லிம்கள் இருக்க கூடாது என்ற இனவாத சிந்தனைகளை கொண்ட சக்திகளினதும், அரசியல் பிற்போக்கு சக்திகளினதும் எதிர்ப்புக்களால் முஸ்லிம்களுக்கும் உரித்தான இந்திய வீடுகள் வழங்கப்படாமல் போனது அதற்கு முழுமையான பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் போன்றவர்களின் எதிர்ப்பே பிரதான காரணமாகும்.

அப்பாவி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விடமைப்புத் திட்டத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் சரியான முறையில் வன்னி மாவட்டத்தில் பகிர்ந்தளித்து வந்துள்ள போதும், தமிழ் மக்களை பயங்கரவாதிகாளக காண்பித்து சர்வதேசத்தில் இருந்து அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் பிரஜைகள் குழுக்கள் என்ற பெயர்களில் அவற்றை பகிர்ந்து கொண்டு காட்டிக் கொடுப்புக்களை செய்வதை எம்மால் காணமுடிகின்றது.

இந்திய பிரதமரின் வருகையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களது இலக்கினை அடையும் வகையில் திசை திருப்பும் ஒன்றாக இவ்வறான ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன என்றும் வடமாகாண சபை உறுப்பினர் மேலும் கூறினார்.

ஆமைச்சர் றிசாத் பதியுதீன் வன்னி மாவட்ட தமிழ் மக்களுக்கே அதிகமான பணிகளை ஆற்றியுள்ளார் என்பதை எம்மால் நிரூபிக்க முடியும். இருந்த போதும் அந்தப் பணிகள் அம்மக்களுக்கு சென்றடைவதையே நாமும் விரும்புகின்றேன். செய்தவைகளை சொல்லிக்காண்பிப்பதை விட எமது இரு சமூகத்திற்கு மத்தியில் காணப்படும் புரிந்துணர்வையும், விட்டுக் கொடுப்பையுமே நாம் அதிகமாக விரும்புகின்றோம் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் மேலும் கூறியுள்ளார்.

Published by

Leave a comment