தேசிய காங்கிரஸின் தலைமை மைத்ரிக்கு ஆதரவாக தேர்தலில் களமிறங்கியிருந்தால் மாகாண அமைச்சுப் பதவி உதுமாலெப்பைக்கே: தேசிய காங்கிரஸின் மாவட்ட செயாலாளர் நஸீர் ஹாஜி

unnamedஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: லொறி விபத்தொன்றில் தனது இரு கால்களையும் இழந்துள்ள ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச் சேர்ந்த பஸ்மீர் என்ற இளம் குடும்பஸ்தரின் வாழ்வாதாரம் கருதி கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் கௌரவ  எம்.எஸ். சுபைர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிய ஐம்பதாயிரம் ரூபா மூலம் அமைக்கப்பட்ட வர்த்தக நிலையத்தினை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தேசிய காங்கிரஸின் செயலாளரும், ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ். நஸீர் உரையாற்றுகையில்,

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு நேரடியாக் உதவிவரும் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் எம்.எஸ். சுபைர் அவர்களை நாம் எல்லோரும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

இவரை எமதூரின் துணிச்சல் மிக்க அரசியல் வாதியாக பலரும் இனங்கண்டுள்ள சந்தர்பத்தில் ஜனாதிபதி தேர்தல் வந்த போது, ஏற்கனவே இருந்த அரசிலிருந்து முதன்முதலாக விலகி சமூகத்தில் மற்றுமொரு சாதனையை படைத்தார்.

ஏறாவூரில் எந்தவொரு அரசியல் தலைமையும் கைகொடுக்காத போது, இச் சாதனை வீரன் தனியாக நின்று மைத்ரியின் வெற்றிக்காக இரவுபகலாக பாடுபட்டார். அதற்கு அவருக்கு கிடைத்துள்ள பரிசு கிழக்குமாகாணசபை பிரதி தவிசாளர் பதவியையே இழக்கப் போவதாகும். இவர் சார்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை, கிழக்கு மாகாணசபையில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதில் புதிய அரசிடமும், முஸ்லிம் காங்கிரசிடமும் தோற்றுப் போய்விட்டதா என கேட்க விரும்புகிறேன்.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற இவருக்கு கட்சியின் தலைமை அமைச்சுப் பதவியை பெற்றுக் கொடுத்த போதும், 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற இவருக்கு இவரது கட்சித் தலைமை அமைச்சுப்பதவியை பெற்றுக்கொடுக்க தவறிவிட்டது. இருந்தாலும் இவரது ஆளுமையை நேரடியாக கண்ட முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் சிபார்சில் பிரதி தவிசாளர் பதவியாவது கிடைத்து கௌரவிக்கப் பட்டார்.

ஆனால் இன்று கிழக்குமாகாணசபைக்கு புதிய முதலமைச்சர் நியமிக்கப்பட்ட பின்னர் அவரது பிரதி தவிசாளர் பதவியைக்கூட தக்க வைக்க முடியாமல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை இருப்பதை எண்ணி கவலை அடைகிறேன்.

ஆனால், நான் சார்ந்துள்ள தேசிய காங்கிரஸின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்கள்  2008 யிலும்இ 2011 யிலும் கிழக்குமாகாணசபை ஆட்சியில் கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களுக்கு அமைச்சுப்பதவியை பெற்றுக் கொடுத்து மாகாணத்தின் மூவின மக்களும் பயன் பெறக்கூடிய சேவையை அவர் மூலம் வழங்கவைத்து அழகு பார்த்தார்.

இன்றைய சூழ்நிலையில் தேசிய காங்கிரசின் தலைமை மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவாக செயற்பட்டிருக்குமானால் இன்றும் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் அமைச்சர்தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன். முஸ்லிம் காங்கிரசின் அத்தனை சூழ்ச்சிகளையும் வெற்றிகொண்டு  அரசின் ஆதரவுடன் தலைவர் அதாஉல்லாஹ் அவர்கள் மாகாணசபையின் அமைச்சு பதவியை பெற்றுக் கொடுத்திருப்பார். என்று கூறினார்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸீம், கிராம சேவை உத்தியோகத்தர் ஸாகீர் ஹுசைன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

unnamed

Published by

Leave a comment