காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில்

DE Office ஏ. எல். டீன் பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி, பாலமுனை, காங்கயனோடை, சிகரம், ஒல்லிக்குளம், மஞ்சந்தொடுவாய்  சேர்ந்த சுமார் 30  பாடசாலைகளின் மாணவ மாணவிகளின் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 16.03.2015 திங்கட்கிழமை பி.ப. 03.00 மணிக்கு காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் தலைமையில் நடைபெற உள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் பல்வேறுபட்ட போட்டிகள் இடம்பெற இருப்பதுடன், போட்டியில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு பெறுமதிவாய்ந்த சாண்றிதழ்கள், பரிசில்களும் வழங்கப்பட இருப்பதுடன் இந்நிகழ்விற்கு அதிகளாக அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் பலரும் கலந்து சிறப்பிக்க எள்ளதாக கோட்டக் கல்வி பணிப்பளார் எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் தெரிவித்தார்.

Published by

Leave a comment