– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: புதிய காத்தான்குடி கைராத் வித்தியாலயத்திற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பிரதிநிதிகள் விஜயம் ஒன்றை கடந்த (09.03.2015) அன்று மேற்கொண்டனர். இந்த விஜயத்தின்போது NFGGயின் காத்தான்குடி பிரதேச தலைமைத்துவசபை உறுப்பினர்களான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார், MACM.ஜவாஹிர், MHA.நஸீர் மற்றும் மகளிர் அணி உறுப்பினர் அனீஸா பிர்தௌஸ் ஆகியோருடன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பாடசாலை அதிபரின் வேண்டுகோளின் அடிப்படையில் இடம்பெற்ற இந்த விஜயத்தில் மாணவர்களின் கல்வி நிலை குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பாடசாலைக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தொண்டர் ஆசிரியர் ஒருவரை நியமித்துத் தருமாறும், 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களின் அறிவினை மேம்படுத்தும் வகையில் அதற்கான கற்றல் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் பாடசாலை அதிபரினால் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை கருத்திற்கொண்ட NFGG பிரதிநிதிகள் இந்த விடயங்களை உரிய முறையில் அதற்கான தீர்வினை பெற்றுத் தருவதற்கு தம்மாலான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததுடன், இது தொடர்பில் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வலயக் கல்வி அதிகாரியிடம் கலந்துரையாடுவதாகும் தெரிவித்தனர்.
Published by



Leave a comment