முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் NFGG தனது அரசியல் நடவடிககைகளைில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமா..? கே.எல்.எம்.பரீட் பகிரங்க சவால்

fareed[1]ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி: முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படா விட்டால் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி  தனது அரசியல் நடவடிககைகளைில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான கே.எல்.எம். பரீட் ஜே.பி  தெரிவித்தார்.

இந்த விடயத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி பொறுப்புடன் பதில் சொல்வதுடன் எனது பகிரங்க சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கே.எல்.எம். பரீட் ஜே.பி  தெரிவித்தார்.

முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இலஞ்கம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி முறைப்பாடுகளை செய்திருப்பதனை நாம் அறிந்த விடயமாகும்.

குற்றம் நிருபிக்கப்பட்டால் தான் அரசியலில் இருந்து முற்று முழுதாக ஒதுங்கிக் கொள்வதாக முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள நிலையில் குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியும் தனது அரசியல் நடவடிககைகளைில் இருந்த முற்று முழுதாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அது  அவர்களுக்கு மிக நன்றாகும்.

கடந்தகாலம் ஆட்சி அதிகாரத்தில் ஹிஸ்புல்லா இருந்தமையால் அவரின் ஊழல், மோசடிகளை உரிய முறையில் விசாரிக்க முடியாது போய்விட்டது என்று சொல்லித்திருந்தவர்களுக்கு இது ஒரு பொன்னான காலம். எனவே இதனை விட ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது தெரியாத விடயமாகும். எனவே  ஆணைக்குழுவின் ஊடாக ஹிஸ்புல்லாவின் ஊழல், மோசடிகளை நிரூபியுங்கள் அதே நிமிடம் நானும் ஹிஸ்புல்லாவின் அரசியலை விட்டு விலகிக் கொள்கின்றேன்.

ஆணைக்குழுவின் அறிக்கை ஹிஸ்புல்லாவுக்கு சாதகமாக அமையுமாயின், அதன் பிறகு இந்த நல்லாட்சியில் நீதி இல்லை, நேர்மை இல்லை ஆணைக்குழுவில் நடவடிக்கைகள் சரி இல்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். நடப்பது நல்லாட்சி………?

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஹிஸ்புல்லாவுக்கு ஆப்பு வைக்க நினைக்கின்ற கயவர்களுக்கு ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு பத்வா ஆக இருக்கும் என நினைக்கின்றேன் என்றும் கே.எல்.எம். பரீட் ஜே.பி  தெரிவித்தார்.

Published by

2 responses to “முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் NFGG தனது அரசியல் நடவடிககைகளைில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமா..? கே.எல்.எம்.பரீட் பகிரங்க சவால்”

  1. Best Leader.

  2. மண்ணின் மைந்தனின் தில்லு முல்லுகளை அங்கீகிரத்துக்கொண்டும் அதில் பங்குவகித்துக்கொண்டும் நீங்கள் வேண்டுமானால் இருந்துவிட்டுப் போங்கள் ஆனால் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி அப்படி ஒருபோதும் இருக்காது. மக்கள் கட்சி என்ற வகையில் மக்களுக்கெதிரான அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக அதன் குரல் எப்பொழுதும் ஓங்கி ஒலிக்கும்!!!

Leave a reply to mohmedrislaam Cancel reply