பொறியியலாளர் சிப்லிக்கு பகிரங்க பதில் : எழுதியது நானல்ல: வை.எல்.எம். இப்றாஹிம் ஜி.எஸ்.ஓ தெரிவிப்பு

YLM GSடீன் பைரூஸ்

காத்தான்குடி: கடந்த 20.2.2015 அன்று காத்தான்குடியிலிருந்து வாராந்தம் வெளிவரும் வாராந்த பத்திரிகை ஒன்றில் பொறியியலாளர் சிப்லிக்கு பகிரங்க பதில் எனும் தலைப்பிட்டு முன்பக்கத்தில் ஒரு கட்டுரையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையின் இறுதியில் வை.எல்.எம். என பெயரிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் என்னை பலரும் வை.எல்.எம். என அழைப்பதாலும் வை.எல்.எம். பேக்கரி ஹோட்டல் எனும் தொழில் ஸ்தாபனத்தை எனது பிள்ளைகள் நடாத்துவதாலும் கடந்த காலங்களில் அரசியல் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த வகையிலும் அத்துடன் வை.எல்.எம். ஜி.எஸ் என கிராம சேவகராக மக்கள் அழைப்பதாலும் வை.எல்.எம். இப்றாஹிம் எனும் எனது பெயரை அன்புப் பெயராக வை.எல்.எம். என்றே அழைக்கின்றனர். அடையாளபப்டுத்துகின்றனர்.

குறித்த பத்திரிகையில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரையை படித்த பலரும் அந்த கட்டுரையின் இறுதியில் அதை எழுதியவர் வை.எல்.எம். என எழுதப்பட்டுள்ளதால் மறைமுகமாகவும் நேரடியாகவும் என்னை நோக்கியே வினவுகின்றனர்.

இது தொடர்பில் உரிய பத்திரிகை ஆசிரியருடன் தொடர்பு கொண்டு பல பிரமுகர்களும், நண்பர்களும், சமூக சேவையாளர்களும், குறித்த கட்டுரையை நான் எழுதியதாகவே குறிப்பிடுகின்றனர். இதனால் சங்கடங்களை சந்திக்கின்றேன். இதற்கான மறுப்பொன்றினை பிரசுரிக்க முடியுமா எனக் கேட்ட போது குறித்த பத்திரிகை ஆசிரியர் அது தாங்கள் அல்ல என்றும் மறுப்பை வெளியிட அவசியமில்லை எனவும், குறிப்பிட்டார்.

எனவே ‘பொறியியலாளர் சிப்லிக்கு பகிரங்க பதில்’ எனும் கட்டுரைக்கும் எனக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி.

இவ்வண்ணம்,

வை.எல்.எம்.என அழைக்கப்படும் வை.எல்.எம். இப்றாகீம் ஜி.எஸ்.ஓ

Published by

One response to “பொறியியலாளர் சிப்லிக்கு பகிரங்க பதில் : எழுதியது நானல்ல: வை.எல்.எம். இப்றாஹிம் ஜி.எஸ்.ஓ தெரிவிப்பு”

  1. கிராம ஊத்தியோகத்தர் வை.எல்.எம். இப்றாஹீம் அவர்கள் கூறியிருப்பது யாவும் உண்மை. அதில் உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

Leave a comment