திக்ரிட் நகரின் ஒருபகுதி கைப்பற்றியது ஈராக் படை!

iraqபக்தாத்: இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரிட் நகரின் ஒருசில பகுதிகளை ஈராக் இராணுவம் மீட்டுள்ளனர். ஈராக் துருப்பினரின் முன்னேற்றத்தை தடுக்க ஐ.எஸ். நகரெங்கும் குண்டுகளை வெடிக்கச் செய்வதாக ஈராக் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக அரச படை திக்ரிட் நகரின் வடக்கு எல்லையில் இருக்கும் அல் அலாம் நகரை கைப்பற்றி இருந்தது.

கடந்த ஆண்டு ஐ.எஸ். கைப்பற்றிய திக்ரிட் நகரை மீட்கும் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையை ஈராக் இராணுவம் கடந்த வாரம் ஆரம்பித்திருந்தது. ஐ.எஸ். போராளிகள் ஈராக் மற்றும் சிரியாவின் கணிசமான நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூல் ஐ.எஸ். கோட்டையாக இருந்து வருகிறது.

ஈராக்கின் சுன்னி முஸ்லிம்களின் நகரும் முன்னாள் தலைவர் சதாம் ஹூஸைனின் சொந்த ஊருமான திக்ரிட்டின் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிட்டதை ஈராக் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அரச படையின் முன்னேற்றத்தை தடுக்க ஐ.எஸ். போராளிகள் டைக்ரிஸ் நதிக்கு குறுக்காக இருக்கும் ஒரே பாலத்தை தகர்த்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் குறிப்பிடுகின்றன. அல் அலாம் நகர ஆளுனர் கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிடும்போது, “சிறு நகரம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்க வந்துவிட்டது” என்றார்.

iraq

“இந்த வெற்றியை இட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். திக்ரிட் மற்றும் மொசூல் நகரின் விடுதலைக்கான ஆரம்பமாக அல் அலாம் வெற்றி அமைகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

திக்ரிட் நகர் மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் ஐ.எஸ். போராளிகள் வீதி குண்டுகள் மற்றும் ஸ்னைப்பர் தாக்கு தல்கள் நடத்துவதால் அரச படையின் முன்னேற்றம் தாமதம் அடைவதாக ஈராக் அதிகாரிகள் குறிப்பிட் டுள்ளனர். திக்ரிட் நகர் மீட்கப்படும் பட்சத்தில் ஈராக் அரசுக்கு பெரும் ஊக்கமாக அது இருக்கும் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

Published by

Leave a comment