றியாத்: சவுதி அரேபியாவுக்கும் சுவீடனுக்கும் இடையேயான ராஜீய மோதல் வலுத்துவரும் வேளையில், சுவீடனுக்கான தமது தூதரை திரும்பிவரும்படி சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் நிலவும் மனித உரிமைகள் குறித்து சுவீடன் செய்திருந்த விமர்சனங்களினால் கோபமடைந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுவீடனின் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
எனினும் ஏட்டிக்கு போட்டியாக அங்கிருந்து தமது தூதரை நாடு திரும்பும்படி கூறும் எண்ணம் ஏதும் சுவீடனுக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எவ்வகையிலும் இருநாட்டுக்கும் இடையேயான ராஜீய உறவுகளில் விரிசல் இல்லை எனவும் சுவீடிஷ் வெளியுறவுத்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
ஜனநாயகம் மற்றும் மகளிர் உரிமைகள் குறித்து சுவீடிஷ் வெளியுறவு அமைச்சர் மார்கட் வல்ஸ்ட்ராம் அரபு லீக் மாநாடு ஒன்றில்பேச விழைந்ததை சவுதி தடுத்ததை அடுத்து இருநாடுகளுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டன. பின்னர் நீண்டகாலமாக சவுதிதியுடன் நிலவி வந்த இராணுவ உடன்பாட்டை ஸ்வீடன் முறித்துக் கொண்டது.
Published by

Leave a comment