காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நாளை
– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா 13-03-2015 நாளை வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஜாமிஆ கடைத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் தலைவர் மௌலவி ஏ.எம்.அலியார் (ரியாழி) தலைமையில் இடம்பெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவில் முதன்மை அதிதியாக ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலானா மௌலவி ஷைகுல் பலாஹ் எம்.ஏ.முஹம்மது அப்துல்லாஹ் (றஹ்மானி) கலந்து கொள்ளவுள்ளார்.
ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி
இங்கு விஷேட உரையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.முர்ஷித் முழப்பர் (ஹூமைதி) நிகழ்த்தவுள்ளார்.
மேற்படி பட்டமளிப்பு விழாவில் 8பேர் மௌலவி பட்டம் பெறவுள்ளதோடு 6பேர் ஹாபிழ் பட்டம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment