பிரதமர் மோடியின் வருகையும் அதனது மறுமுகம் தொடர்பிலான எதிர்வு கூறலும்

modiவன்னிக் குரலான்

கொழும்பு: இலங்கையும் – இந்தியாவும் கொண்டுள்ள நெருக்கமும், இருக்கமுமான உறவை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதிலும், இலங்கையில் தற்போது புதிய அரசு ஏற்படுத்திவரும் மாற்றம் தொடர்பில் அளவீடு செய்வதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் பிரதான நோக்கங்களாக காட்டப்பட்ட போதிலும், அதற்கு மாறானதொரு உண்மையாக இலங்கை – சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கத்தால் அயல் நாடான இந்தியா எதிர்காலத்தில் எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கண்ணம் வைக்கும் ஒன்றாகவே இந்த விஜயம் அமைக்கின்றது என்பது அரசியல் விமர்சகர்களின் எதிர்வு கூறல்களாகும்.

இம்மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரும் இந்திய பிரதமர் குறிப்பாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர்.உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளை சந்தித்து நீண்ட கலந்துரையாடல்களை செய்யவுள்ளதாகவு செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புக்கள் நாட்டின் சுயாதிபத்தியத்துக்கும் மாறாக இருக்கக் கூடாது என்பதை பல்வேறு அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமரின் வருகையினை தமது தனி ராஜ்யத்தின் முக்கிய கதாபாத்திர நாயகனாக எடுத்துள்ளதையும், இலங்கை அரசிற்கு அளுத்தத்தை கொடுக்கும் ஓரு பயணமாக மொடியின் இந்த வரவை காட்டியுள்ளதையும் இங்கு பார்க்க வேண்டியுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட போரின் விளைவால் முஸ்லிம்களும், சிங்களவர்களும் பாதிக்கப்பட்டனர். தமிழ் மக்கள் புலிகளினால் பாதுகாக்கப்பட்டனர். அரச படைகள் இலக்கு  வைத்து தாக்கியது அப்பாவி தமிழ் மக்களை அல்ல, புலிகளை தான் என்பதை இந்தியாவும் தெளிவாக புரிந்து வைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாத்தை அளிப்பதற்கு இந்திய மத்திய அரசு முழுமையான ஆதரவையளித்ததை இந்த தருணத்தில் நினைவபடுத்துவது பொருத்தமாகும். இவ்வாறான நிலையில் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் எனைய உதவிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

குறிப்பாக இந்திய அரசாங்கம் இலங்யைில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 50 ஆயிரம் வீடுகளை நிர்மானித்து கொடுக்கும் வேலைத்திட்டமொன்றினை ஆரரம்பித்ததுடன் இதில் அனைத்து இன மக்களும் நன்மையடைவர் என்ற எண்ணப்பாடு இருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு மட்டும் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று மேற் கொண்ட போராட்டம் அவர்களின் பார்வையில் வெற்றி கொண்டதொன்று யாழ்ப்பாணம், வவுனியா, சூடுவேந்தபுளவு, மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பயினாளிகள் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் திட்டமிடப்பட்ட முறையில் இப்பிரதேசத்தில் வசிப்பவர்கள் அல்ல என்று குறிப்பு எழுதப்பட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயத்துக்கு பெயர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது தொடர்பில் மக்கள் தமது விசனத்தை வெளிப்படுத்தியுமுள்ளனர்.

இந்த பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் முஸ்லிம்கள் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். இந்திய அரசாங்கம் இந்த வீடமைப்பு திட்டத்தை நடை முறைப்படுத்த முன்னர், முஸ்லிம்களுக்காக 7500 வீடுகளை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதும், அந்த எண்ணிக்கை இன்னும் ஏன் எட்டப்படவில்லை என்ற கேள்வி முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு தடைகளாக இருந்தவர்கள் யார் என்பது தொடர்பில் கேள்விகள் எழுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் வடக்கு முஸ்லிம்கள் இந்திய பிரதமர் மோடியின் வருகையினை மிகவும் அவதானமாக பார்க்கின்றனர்..மோடியினை பொறுத்த வரையில் இந்திய முஸ்லிம்கள் அவர்களது வெற்றிக்கு வாக்களிக்காதவர்களாகவே இருந்துள்ளதை காணமடிகின்றது.அவரது தலைமையின் கீழ் குஜராதில் அரங்கேறிய படுகொலை சம்பவங்களே முஸ்லிம்களை எதிர்ப்பு கொள்ளச் செய்தது.இவ்வாறான பின்னணியில் மோடி இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் எந்த நிலைப்பாட்டினை கொண்டுள்ளார் என்பது தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் இரு நிலைத் தன்மையினை ஏற்படுத்தியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும் இலங்கையில் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சிறப்புரையினை மோடி ஆற்றவுள்ளதுடன், பல தரப்பு அரசியல் பிரதி நிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அவரின் இரு நாள் விஜயத்தின் பிற்பாடு இந்திய சென்று மோடி என்ன சொல்லப் போகின்றார் என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மிகவும் குறைந்த நேர ஒதுக்கீட்டில் இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் மோடியினை சந்திக்க இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன தேசிய அரசியலுக்கும், மாகாண சபை அரசியலுக்கும் வழங்கிவரும் ஆதரவு தொடர்பிலும் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய வீடமைப்பு திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிராகரிப்பு தொடர்பிலும் அதிக கவனம் கொடுத்து  பேச வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Published by

Leave a comment