பாலியல் புகாரில் இருந்து தப்பிய Bபங்காளி வீரர் ஹொஸைன்

bangladeshடாக்கா: பங்களாதேஷ் வீரர் ரூபெல் ஹொசைன் மீது அளித்துள்ள பாலியல் புகாரை அவரது காதலி வாபஸ் பெற்றுள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், பந்துவீசிய பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய வங்கதேச பந்துவீச்சளார் ரூபெல் ஹொசைன் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர்கள் இயர்ன் பெல், அடுத்து அணித்தலைவர் மோர்கன் ஆகியோரை வீழ்த்தினார்.

தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் சிக்சர் அடித்து மிரட்டிய பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோரையும் ரூபெல் ஹொசைன் ஆட்டமிழக்க செய்தார். இக்கட்டான சூழலில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி உலகக்கிண்ண போட்டியில் முதல் முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில், மைதானத்தில் ருபெல் ஹொசைன் காட்டிய திறமையால் மனமகிழ்ந்த அவரது முன்னாள் காதலி நஸ்னின் அக்தர் மிகுந்த உற்சாகம் அடைந்து அவர் மீது தொடுத்துள்ள வழக்கினை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

bangladesh

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஹொசைன் செய்த சாதனையால் நான் தற்போது மிகுந்த சந்தோஷமாக உள்ளேன். அவரை நான் மன்னித்து விட்டேன். இதனால், அவர் மீது கொடுத்திருந்த வழக்கை வாபஸ் பெறப்போகிறேன் என்று கூறியுள்ளார்

வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தருக்கும் ரூபெல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இரூபெல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்- மனைவி போல இணைந்து வாழ்ந்ததாகவும், ஆனால், திடீரென ரூபெல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் நஸ்னின் அக்தர் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment