“நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டை வரவேற்கிறேன்”: பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்

hizbullah (3)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டை தான் வரவேற்பதாகவும், அதற்காக நன்றி கூறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த 25 வருடங்கலாக ஊழல் ஊழல் என்று இவர்கள் சொல்லி வந்தார்கள். அதை உடனடியாக கொடுக்குமாறு நான் ஒரு மாதத்திற்கு முன்பே வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

ஆகவே உடனடியாக தங்களிடம் இருந்த ஆவணங்களை ஒப்படைத்து இருப்பதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன், நன்றி கூறுகின்றேன்.

மிக விரைவாக நான் எனது சட்டத்தரணிகள் சகிதம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை சந்தித்து இந்த விடயத்தை உடனடியாக துரிதப்படுத்துமாறு வேண்டவுள்ளேன்.

நான் பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு இது தொடர்பான உண்மைத் தன்மையை உடனடியாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வெளியிட வேண்டுமென்று நான் மிக விரைவில் எனது சட்டத்தரணிகள் சகிதம் சென்று அவர்களிடத்தில் வேண்டுகோள் விடுக்க இருக்கின்றேன்.

ஏதாவது ஒரு சிறிய சதமாவது இலஞ்ச ஊழல் இருக்குமாக இருந்தால் அரசியிலில் இருந்து நான் முற்று முழுதாக விலகுவேன். நாங்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றோம்.

நாங்கள் இலஞ்சம் ஊழலில் ஈடுபடாமல் இருப்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்காக, வேறு யாருக்குமாக இல்லை. எங்களை படைத்த இறைவனுக்கு பயந்துதான் இலஞ்சம் ஊழலில் ஈடுபடாமல் இருக்கின்றோமா தவிர, வேறு யாருக்காகவும் இல்லை.

ஆகவே, இவர்கள் இவ்வாறு இன்று ஒப்படைத்துள்ள முறைப்பாட்டையிட்டு சந்தோஷமடைகின்றேன், பாராட்டுகின்றேன்.
மிக விரைவில் நான் எனது சட்டத்தரணிகள் சகிதம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு சென்று இது தொடர்பிலே விசாரித்து உடனடியாக இந்த தீர்ப்பை இது தொடர்பான உண்மை தன்மையை உடணடியாக வழங்குமாறு நான் கேட்க இருக்கின்றேன்.

அவர்களுக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும், சகல வசதிகளையும் செயற்படுத்தி, அவற்றையும் கொடுத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி மிக விரைவில் இவர்களுடைய கோரிக்கையை துரிதப்படுத்தி விசாரிக்குமாறு கேட்க இருக்கின்றேன் என சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

ஆகவே மிகத் தெளிவாக சொல்லிவைக்க விரும்புகின்றோம். ஒரு சதமேனும் இலஞ்சம், ஊழல் என்று நீரூபிக்கப்பட்டால் அல்லது அது தொடர்பில் உன்மை இருந்தால் அரசியிலிருந்து முற்று முழுதாக ஒதுங்கி ஒதுங்கி விடுவேன் என்று இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் சொல்லி வைக்க விரும்புகின்றேன்’ என்று மேலும் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்.

Published by

One response to ““நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டை வரவேற்கிறேன்”: பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்”

  1. காத்தான்குடியின் பாம் வீதி அபிவிருத்தி தொடரபில் ஏற்பட்ட சர்ச்சையினை விசாரிக்கும் சம்மேளனக் கூட்டத்தில் சிப்லீ பாறுாக் அந்த அபிவிருத்தி தொகையில் 10 % கொமிஷன் நீங்கள் கேட்டதாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். அந்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட நீங்கள் சிப்லி பாறுாக்கிடம் கேட்கப்பட்டது காத்தான்குடியில் அமைந்திருக்கும் University College இன் அபிவருத்திக்கானது என கதை விட்டீர்கள்.

    University College ஆனது அரசாங்கத்தினது என்றால் வீதி அபிவிருத்தியில் கொமிஷன் பெற்று அதனை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் உங்களுக்கு கிடையாது. அதன் அபிவிருத்தியை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். ஆக அத‌னை உரிய திணைக்களத்தினுடாக பெற்றுக்கொடுக்கவே மக்கள் உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள்.

    இல்லை University College ஆனது அரசாங்கத்தினது இல்லை உங்களின் தனிப்பட்ட கல்வி நிறுவனம் என்றால் வீதி அபிருத்திக்கான மக்கள் பணத்தில் கொமிஷன் ‌(இலஞ்சம்) பெற்று அதனை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியமும் உங்களுக்கு கிடையாது.

    இது ஒரு விடயம் உங்களின் 25 வருடங்களுக்கும் மேலான அரசியல் வாழ்வில் இப்படி பல இருக்கின்றன. எனவே சிறு பிள்ளைத்தனமாக நான் ஒரு சதமேனும் இலஞ்சம் பெறவில்லை என கதை அளப்பது பொருத்தமற்றது.

    நீங்கள் அரசியல்வாதியாக பாரளுமன்றம் சென்றதற்கும், ஏனைய அரச நிறுவனங்களில் கடைமை புரிந்ததற்கும் அரசாங்களம் வழங்கிய சம்பளத்தினால் பெற்றுக்கொண்ட வருமானத்திற்கும் தற்போது உங்களிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதிக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை கணக்கிட்டாலே உங்களின் திருவிளையாடல்களைக் கண்டுகொள்ள முடியும்.

Leave a comment