காத்தான்குடி: உங்கள் அரசியல் பயணத்தின் நான் அறிந்து கொண்ட சில பக்கங்கள். 2010 ம் ஆண்டு கிழக்கு மாகண சபை தேர்தலில் முன்னால் பிரதி அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் மூலம் அரசியலுக்கு வந்த நீங்கள் அன்றில் இருந்து இன்று வரை சுயதீனமாக செயற்படுவதாகவும் MLAM. ஹிஸ்புல்லாஹ்வோடு இணையும் போது நிபந்தனையோடு இணைந்ததாகவும், அந்நிபந்தனைகளிள் நீங்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு ஹிஸ்புல்லாஹ்வின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்றும் மார்க்கத்திற்கும் அரசியலுக்குமான போராட்டம் என்று வந்தால் அதில் மார்க்கத்திற்காக செயற்படுவேன் என்று சொன்னீர்கள்.
இது போன்ற பல விடயங்களை முன்வைத்தீர்கள். அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வை விட்டு சமூகத்துக்காக விலகியதாக ஊடகங்களுக்கு தெரிவித்தீர்கள். ஆனால், ஹிஸ்புல்லாஹ்வேடு இருக்கும் போது பெரும்பான்மை கடும்போக்குவாதிகளாள் நம் சமூகத்துக்கு நடந்த அநீதிகளின் போது நீங்கள் பேசவில்லை. வாய் மூடி மெளனியாக இருந்தீர்கள். அதோ போன்று நீங்களும் பல விடயங்களிலும் கண்மூடித் தனமாக இருந்தீர்கள். உதரணமாக திவிநெகும சட்டமூலம் மாகண சபைக்கு வரும்போது அதற்கு ஆதரவாக கண்மூடித்தனமாக கையொப்பம் இட்டீர்கள். அந்த சட்ட மூலத்தின் பாரதூரம் உங்களுக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம்.
பொது பல சேனா, சிகலராவாய முஸ்லிம் சமூகத்துக்கு பல அட்டகாசம் காட்டும் போது வாய் மூடி மாகாண சபை சென்று வந்தீர்கள். மாகாண சபைக்கு ஒரு கருப்புப்பட்டி கூட உங்களாள் அணிந்து செல்ல முடியவில்லை. ஆனால், கடந்த ஜனாதிபதி தேர்தலில் காத்தான்குடி கடற்கரையில் நடந்த கூட்டத்தில் நமது பள்ளிவாயல்களை உடைத்தார்கள், நமது இளைஞர் மரணித்தார்கள் என்று கண்ணீர் வடித்தீர்கள். பேச வேண்டிய இடத்தில் பேசவில்லை. கடந்த மாகண சபை தேர்தலில் 1 ம் இலக்கத்துக்காக (முஹம்மட் பாறூக் முஹம்மட் சிப்லி) என்ற பெயரை ‘அப்துல் பாறூக் முஹம்மட் சிப்லி ‘என்று மாற்றிக்கொன்டீர்கள். 1ம் இலக்கத்துக்காக வாப்பாவின் பெயரை மாற்றும் அளவிற்கு அன்றில் இருந்து உங்கள் சமூகப்பற்று இருந்து.
இஸ்லாமிய நூதனசாலை விடயமும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை விடயமும் நீங்கள் ஹிஸ்புல்லாஹ்வோடு இருக்கும் போது அமுல் படுத்தப்பட்ட திட்டம். அதற்கு நீங்களும் மும்முரமாக இருந்தவர். அங்கு அமைக்கப்படும் உருவச்சிலை விடயத்தில் இன்று வரை ஏதும் பேச இயலாது வாய் மூடி மெளனியாக இருக்கின்றீர்கள். உருவச்சிலை சம்பந்தமாக உங்களுடைய நிலைப்பாடு என்ன? பாம் வீதி ஆர்ப்பாட்டம் நடந்த போது அங்கு வந்து உறையாற்றிய நீங்கள் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல் தன்வசம் இருப்பதாகவும் தேவை என்றால் சம்மேளனம், தஃவா அமைப்புகள் முன் நீருபிக்க தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக சென்னீர்கள்.
ஆனால், ஹிஸ்புல்லாஹ்வின் தரப்பில் செல்கிறார்கள் சிப்லியால் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல் விடயம் வெளிவந்தால் அதில் சிப்லியும் மாட்டிக்கொள்வார். அவரும் 10% கொமிஷன் பொற்றுள்ளார் என்று, ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல் விடயம் உங்களிடம் இருந்தால் ஏன் நீங்கள் அதை மறைக்கிறீர்கள்? நீங்கள்தான் அல்லாஹ்வை பயந்துதானே அரசியல் செய்கிறீர்கள். இனியாவது காலம் கடத்தாமல் இந்த விடயம்களுக்கு பதில் செல்லுங்கள்.
ஹிஸ்புல்லாஹ் விட்டு பிரிந்து ACMC தலைவர் ரிசாத்தோடு அரசியலை காய் நகர்த்த ஆரம்பித்துள்ள நீங்கள் இன்று எந்த கட்சியில் உள்ளீர்கள் ? உங்கள் ஆதரவாளர்களாள் அரிய முடிகிறது நீங்கள் SLMC யில் இணைந்துள்ளதாக, ஆனால், காத்தான்குடியில் உள்ள SLMC (முபீன்) ஆதரவாளர்கள் செல்கிரார்கள் சிப்லி SLMCயில் இன்னும் இனையவில்லை என்று. இதில் எது உண்மை? நீங்கள் SLMCயில் உறுப்புரிமை பொற்றுள்ளீர்களா? சென்ற 8ம் திகதி காத்தான்குடி வைத்தியசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியின் விஜயம் உங்களின் அழைப்பின் போரில் வர இருப்பதாக முகநூலில் பதிவிட்டிருந்தீர்கள். ஆனால் ULMN. முபீன் அவரது முகநூலில் அவரின் அழைப்பின் போரில் ஹசன் அலி வருவதாக பதிவிட்டிருந்தார்.
வைத்தியசாலைக்கு முன்பு முபீனால்தான் வரவேற்பு பதாகை கட்டப்பட்டிருந்தது. அதில் உங்கள் புகைப்படமோ, பெயரோ பொறிக்கப்படவில்லை. எதிர்காலத்தில் நீங்கள் SLMC யில் இணைந்து அரசியல் செய்வதாக இருந்தால் எந்த நிபந்தனையேடு SLMCயில் இணைவீர்கள்? இப்போது SLMCயில்தான் உள்ளீர்கள் என்றால் எந்த நிபந்தனையேடு இணைந்தீர்கள்?
ஹாபிஸ் நஸீரோடு தனிப்பட்ட வகையில் நீங்கள் நெருக்கமானவர். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் முதலமைச்சர் விடயத்தில் ஹாபிஸ் நஸீருக்கு ஆதரவாக கையப்பம் இட்டீர்கள். அவரை நம்பித்தான் SLMCயில் பயணிக்க ஆரம்பித்துள்ளீர்கள். முதலமைச்சர் என்ற நொண்டிச் சாட்டை வைத்து கட்சி தாவ முனைகிரீர்கள். காரணம் தமிழ் ஒருவருக்கு முதலமைச்சர் போய் விடும் என்று நியாப்படுத்தினீர்கள். ஆனால் ‘கருனா அம்மான் ‘வரும்போது மாலை போட்டு வரவோற்றீர்கள்.
இன்று அந்த TNAயால் தான் ஹாபிஸ் நஸீர் முதலமைச்சராக இருக்கின்ரார். TNA நினைத்து இருந்தால் கிழக்கு மாகண ஆட்சியை மாற்றி இருக்கும். முதலமைச்சரையும் எடுத்து இருக்கும். அதற்காகன சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர்கள் நிதானமாக நடந்து கொன்டனர்.
உங்களுடைய சுய நல அரசியலுக்காக இனவாதம் போசுவதை இனியாவது நிறுத்திக்கொள்ளுங்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் PMGG, UNP, ACMC, SLMC ஆகிய கட்சிகள் இணைந்து ஊரே ஒன்றாக நின்றது போன்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக நின்று ஊரின் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்ள ஏன் பின் வாங்குரீர்கள்?
உங்களாள் தனித்து நின்று பாராளுமன்றமோ, மாகண சபைக்கே செல்ல முடியாது. அதை உணர்ந்த நீங்கள் SLMC நுழைய முனைகுரீர்கள். அது எந்த அளவுக்கு சாத்தியம் ஆகும் என்று காலம்தான் பதில் செல்லும்.
நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் கேள்வியையும் கோட்டுள்ளோன். உங்களிடம் இருந்து தக்க பதிலை எதிர்பார்க்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் பலரின் சந்தேகங்கள் எனது ஒரு சில வரிகள் ஊடாக….!!!
தனிப்பட்ட எந்த நோக்கமும் அல்ல. நன்றி.
ஏ. எம். பர்ஸாத்,
புதிய காத்தான்குடி – 03.
Published by



Leave a comment