காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக கடந்த ஒரு வருடகாலமாக கடமையாற்றிய டாக்டர் ரி. கௌரிசங்கரன் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மாவட்ட வைத்திய அதிகாரியாக Dr. SMBM. றூமி அவர்கள் புதிதாக கடமையினைப் பொறுப்பேற்றதன் பின் டாக்டர் ரி. கௌரிசங்கரன் அவர்கள் இடமாற்றலாகிச் செல்கின்றார்.
டாக்டர் ரி. கௌரிசங்கரன் அவர்களின் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் வைத்தியசாலையின் பல்வேறுபட்ட குறைபாடுகள் தீர்த்து வைக்கப்பட்டதோடு அத்தியாவசிய மருந்துகள், இரத்தப் பரிசோதனைகளுக்கான வசதிகள் மற்றும் கிளினிக் நோயாளர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் என்பன பூர்த்தி செய்யப்பட்டதோடு மினி சத்திர சிகிச்சை பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது.
Published by


Leave a comment