புத்தளம்: புத்தளத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதி திட்டமிடல் அமைச்சருமான மர்ஹூம் நெய்னா மரைக்காரின் சேவையினை நினைவு கூறும்வகையில் ஞாபகார்த்த முத்திரை மற்றும் முதல் நாள் தபால் உறை என்பனவற்றினை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர், பிரபல சமூக சேவையாளர் அல்-ஹாஜ் எஸ்.ஆர்.எம். முஹ்ஸி தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.ஏ. ஹலீம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மர்ஹூம் நெய்னா மரைக்கார் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து செயற்பட்டவர். இங்கிலாந்தில் சட்டத்துறை கற்கையினை நிறைவு செய்து பரிஸ்டர் பட்டம் பெற்ற ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் தலைவர்கள் ஆற்றியுள்ள பணிகளை அளவீடு செய்யும் ஒன்றாகவும், எதிர்கால சமூகத்திற்கு அரசியல் ரீதியான பதிவுளை எடுத்துக்காட்டும் ஒன்றாகவும் இது அமையுமெனவும் அல்-ஹாஜ் எஸ்.ஆர்.எம். முஹ்ஸி தெரிவித்தார்.
Published by

Leave a comment