காத்தான்குடி: பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றை வளர்க்க கற்றுக்கொடுங்கள் இவ்வாறு காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தினத்தையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் அஷ் ஷே-ஹ் ஏ அப்பாஸ் நளீமி தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இஸ்லாமிய பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். நாம் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். சமுதாயத்திற்கு தேவையெனில் நாம் அதனை பெற்றுக்கொடுக்க பின்னிற்கக் கூடாது. மருத்துவத்துறையாக இருக்கட்டும் அரசியல் துறையாக இருக்கட்டும் ஆர்வம் இருப்பின் இத்துறைக்கு செல்ல விடுங்கள் என தெரித்துக்கொள்கின்றேன்.
அதேபோல் பெண் பிள்ளைகளிடம் பாகுபாடுகாட்ட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளை நாட்டுக்கு சுமையாக ஆக்கிவிடாதீர்கள். பேரீத்தம் மரம் போல் பிரயோசனமான பிள்ளைகளாக அவர்களை வளருங்கள். அப்போதுதான் இம்மையிலும் மறுமையிலும் அது பிரயோசனமளிக்கும். நாங்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் தேவையானவர்களாக வாழ வேண்டும். ஐரோப்பாவில் காணப்படும் சடவாத ரீதியான முன்னேற்றம் எமக்கு தேவையில்லை. இதனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப்போவதுமில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதோடு கர்ப்பிணிகளுக்கான போசாக்குப் பொதியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment