கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறத் தடை

Gotabaya[1]கொழும்பு: இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி நீதிமன்றம் ஒன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

காலி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளின்போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திலிருந்த ஆயுதங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய இன்னொரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுதங்களும் முன்னர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் அச்சுறுத்தும் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றார்.

Published by

Leave a comment